CINEMA
“பெண்கள் தான் எங்களுக்கு எல்லாமே”.. ஓப்பனாக பேசிய சூர்யா
சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் சூர்யா பெண்களை குறித்து மிகவும் ஓப்பனாக பேசியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் கடந்த 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “விருமன்”. இத்திரைப்படம் குடும்பப் பெண்களின் மனதை வென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இத்திரைப்படத்தை முத்தையா இயக்கியிருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் “விருமன்” திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், சூர்யா என பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய சூர்யா “எந்த வெற்றியும் தனி வெற்றியாகாது. எங்கள் வெற்றிக்கு எங்கள் குடும்பங்களும் ஒரு முக்கிய காரணம். எங்களை மேலே உயர்த்திவிட எங்களுக்கு பின்னே ஒரு பலம் இருக்கிறது. அந்த பலம் தான் எங்கள் வீட்டு பெண்கள். அவர்கள் நிறைய விஷயங்களை தியாகம் செய்துள்ளனர்” என கூறினார்.
மேலும் அந்த விழாவில் பேசிய கார்த்தி “நாங்கள் இவ்வளவு தூரம் வளர்ந்து நிற்பதற்கு எங்கள் வீட்டு பெண்களின் தியாகம் தான் காரணம். இந்த வெற்றி குடும்ப பெண்களால் வந்தது. ஆதலால் தான் இந்த விழாவில் வீட்டில் உள்ள குடும்ப பெண்களை அழைத்திருக்கிறோம்.
அவர்கள் வாரத்தில் ஒரு நாளாவது தனது கணவர் வெளியே தன்னை சாப்பிட அழைத்துக்கொண்டு போவாரா என ஏங்குவார்கள். அது அவர்களின் சோம்பேறித்தனம் கிடையாது. வீட்டில் சமைத்து சமைத்து சலித்துபோய் அப்படி கேட்பார்கள். அது அவர்களுக்கு ஒரு ஓய்வு கொடுப்பது போன்றது. இன்றும் அது போல் அவர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் இங்கு எங்கள் குடும்ப பெண்களை அழைத்து வந்திருக்கிறோம்” என கூறியது குறிப்பிடத்தக்கது.