Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“அதிதி ஷங்கர் என்னை விட நன்றாக பாடினார்..” சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜலட்சுமி

CINEMA

“அதிதி ஷங்கர் என்னை விட நன்றாக பாடினார்..” சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜலட்சுமி

“விருமன்” திரைப்படத்தில் இடம்பெற்ற “மதுரை வீரன்” பாடலை அதிதி ஷங்கர் பாடியுள்ளார். ஆனால் அவர் பாடியதற்கு முன் அந்த பாடலை சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி பாடியதாக ஒரு செய்தி பரவியது. இந்நிலையில் தற்போது ராஜலட்சுமி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளாராம்.

செந்தில்-ராஜலட்சுமி தம்பதியினர் சூப்பர் சிங்கர் மூலம் தமிழகமெங்கும் பிரபலமாக அறியப்பட்டவர்கள். “சார்லி சாப்ளின் 2” திரைப்படத்தில் இடம்பெற்ற “சின்ன மச்சான்” பாடலை இந்த தம்பதியினர் தான் பாடியிருந்தனர். மேலும் “விஸ்வாசம்” திரைப்படத்தில் இடம்பெற்ற “டங்கா டங்கா” பாடலையும் இத்தம்பதியினர் தான் பாடியிருந்தனர். அதே போல் ராஜலட்சுமி தான் “புஷ்பா” திரைப்படத்தில் இடம்பெற்ற பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய பாடலான “சாமி” பாடலையும் பாடியவர்.

கிராமத்து பாடல்களுக்கு பெயர் இத்தம்பதியினர் தங்களது குரலால் மக்களை கட்டுப்போட்டு விட்டனர் என்று தான் சொல்லவேண்டும்.

தமிழின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், கார்த்தி நடித்த “விருமன்” திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். “விருமன்” திரைப்படத்தை முத்தையா இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்த பாடல்கள் பரவலாக ரசிகர்களை கவர்ந்தது. இத்திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “மதுரை வீரன்” என்ற பாடலை அதிதி ஷங்கர் தான் பாடியுள்ளார். இதனை தொடர்ந்து இந்த பாடலை அதிதி ஷங்கர் பாடுவதற்கு முன் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி தான் பாடியதாகவும் அவரது குரல் நீக்கப்பட்டு அதன் பின் அதிதி ஷங்கர் பாடியதாகவும் ஒரு சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளாராம் அதிதி ஷங்கர். அதாவது “அதிதி ஷங்கர் என்னை விட அந்த பாடலை நன்றாக பாடியுள்ளார். நான் பாடியதை நீக்கிவிட்டு அவர் பாடியதை இடம்பெறவைத்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் இந்த விஷயத்திற்காக அதிதி ஷங்கரை பலர் விமர்சிப்பது தான் வருத்தத்தை அளிக்கிறது” என கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Continue Reading

More in CINEMA

To Top