TELEVISION
மானசி எவ்வளவு அழகா டான்ஸ் ஆடுறாங்க பாருங்க … க்யூட்!!
சூப்பர் சிங்கர் மானசி ரொமன்ட்டிக் பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சூப்பர் சிங்கர்” சீசன் 8 நிகழ்ச்சியில் தனது இனிமையான குரலால் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளைகொண்டவர் மானசி. இவர் கர்னாடக சங்கீதத்தை சிறு வயதிலேயே முறையாக பயின்றவர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு பொதிகை தொலைக்காட்சியில் இவர் பாடியதற்காக அப்போதே ஒரு லட்சம் பரிசாக பெற்றார் என்று கூறப்படுகிறது. அதன் பின் சங்கரா தொலைக்காட்சியின் “சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சியில் இறுதிச்சுற்று வரை சென்றார்.
மானசி இணையத்தில் பல பாடல்களை பாடி வெளியிட்டு வருகிறார். பல ஆல்பம் பாடல்களையும் பாடி வருகிறார். சமீபத்தில் கூட இவர் பாடிய “காதல் போதே” என்ற பாடல் இணையத்தில் வெளிவந்து பரவலாக ரசிக்கப்பட்டது. வழக்கம்போல் தனது இனிய குரலில் பார்வையாளர்களை வசீகரிக்கிறார் மானசி. மேலும் அப்பாடலில் சிறப்பாக நடனமும் ஆடி ரசிகர்களை கவர்ந்திழுக்கிறார். இந்த ஆல்பம் பாடல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில் தற்போது “சூப்பர் சிங்கர்” சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான ஸ்ரீதருடன் ஒரு நடன வீடியோவை வெளியிட்டுள்ளார் மானசி. அதில் தனுஷ் நடிப்பில் வெளிவர இருக்கும் “திருச்சிற்றம்பலம்” திரைப்படத்தில் இடம்பெற்ற “மேகம் கருக்காதா” என்ற பாடலில் வரும் “கண் பாஷை பேசினால்” என்ற வரிகளுக்கு அழகாக நடனமாடுகிறார்.
இந்த பாடல் தற்போது மிகவும் பிரபலமான பாடலாக அறியப்படுகிறது. இணையவாசிகள் பலரும் இந்த பாடலில் இடம்பெற்ற அந்த குறிப்பிட்ட வரிகளுக்கு நடனமாடி அந்த வீடியோவை பதிவேற்றி வருகிறார்கள். தற்போது இது டிரெண்ட் ஆகி உள்ளது. இந்த நிலையில் மானசியும் இந்த பாடலுக்கு நடனமாடி உள்ளார்.
View this post on Instagram
