GOSSIPS
“வாயாடி” நடிகைக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனர்.. ஓட விட்ட தயாரிப்பாளர்.. அய்யோ பாவம்..
தனது வாயாலேயே பெரிய பிரச்சனையில் சிக்கிய அந்த “வாயாடி” நடிகைக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் ஒரு இயக்குனர். ஆனால் தயாரிப்பாளரோ??
கடந்த சில வருடங்களாக தன்னை தானே மாடல் அழகி என்று வாய்விட்டு கொண்டிருந்த அந்த “வாயாடி” நடிகை சில வருடங்களுக்கு முன் அந்த பிரபலமான கேம் ஷோவில் கலந்து கொண்டார். அதன் பிறகு தான் அவரை பலரும் அறிந்து கொண்டனர்.
அந்த கேம் ஷோவிலும் தனது சக கண்டெஸ்டெண்டுகளின் மேல் பல பொய் புகார்களை அடுக்கிய அந்த “வாயாடி” நடிகை, நடுவிலேயே வெளியேற்றப்பட்டார். அதன் பின் அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வாயை வைத்து சும்மா இல்லாமல் பல சர்ச்சையான கருத்தை பேசி வந்தார்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சாதி ரீதியாக ஒரு சர்ச்சையான கருத்தை தனது பாய் ஃப்ரெண்டுடன் வெளியிட்டிருந்தார்.
அவரின் வாய் முகூர்த்தம் பழித்து போய் அவரை போலீஸ் அலேக்காக தூக்கிக் கொண்டு போனது. போலீஸ் அவரை பிடிக்க வந்த போது கூட கதறி அழுது ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
அதன் பின் ஜாமினில் வெளியே வந்த நடிகை, சமீபத்தில் ஒரு பேட்டியில் “எனக்கு வாய்ப்புகளே இல்லை, நான் தூக்கு போட போகிறேன்” என அழுதார். இந்நிலையில் அவர் மேல் பாவம் கொண்ட ஒரு இயக்குனர் ஒரு வெப் சீரீஸில் அவரை நடிக்க அழைத்திருந்தாராம்.
ஆனால் அந்த வெப் சீரீஸின் தயாரிப்பாளருக்கு அந்த நடிகை ஷூட்டிங் வரும் வரை இந்த கதாப்பாத்திரத்திற்கு இவர் தான் நடிக்கப் போகிறார் என தெரியாதாம். ஷூட்டிங் ஸ்பாட்டில் அந்த நடிகையை தயாரிப்பாளர் பார்த்ததும் தான் இயக்குனரிடம் விஷயத்தையே கேட்டறிந்தாராம்.
உடனே தயாரிப்பாளர் அந்த நடிகையை என் வெப் சீரீஸில் நடிக்க அனுமதிக்க மாட்டேன் என கூறி வீட்டிற்கு துரத்திவிட்டாராம். இப்படி தன்னுடைய கேரியர் தன் வாயாலயே கெட்டுவிட்டதே என அந்த நடிகை புலம்பிக் கொண்டு வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
