CINEMA
புதிய இயக்குனர் மீது வன்மத்தை கக்கிய சுந்தர். சி..? யார சொல்றார் இவரு…?
சுந்தர். சி புதிய இயக்குனர்கள் மீது வன்மத்தை கக்கியுள்ள செய்தி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக திகழ்பவர் சுந்தர். சி. இவர் 90-களில் இருந்தே பல வெற்றி திரைப்படங்களை இயக்கி வருபவர். “உள்ளத்தை அள்ளித்தா”, “மேட்டுக்குடி”, “அருணாச்சலம்”, “நாம் இருவர் நமக்கு இருவர்”, “உனக்காக எல்லாம் உனக்காக”, “அன்பே சிவம்”, “கிரி”, “கலகலப்பு”, “தீயா வேலை செய்யனும் குமார்”, “அரண்மனை” என இவ்வாறு இவரின் வெற்றி திரைப்படங்களின் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும்.
சுந்தர். சி திரைப்படங்களை பொருத்தவரை காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும். “மேட்டுக்குடி”, “உள்ளத்தை அள்ளித்தா”, “உனக்காக எல்லாம் உனக்காக”, “வின்னர்” ஆகிய திரைப்படங்கள் காமெடிக்கு பெயர் போன திரைப்படங்களாகும். அதே போல் “கலகலப்பு” திரைப்படமும் சுந்தர். சி கேரியரில் முக்கிய காமெடி திரைப்படம் ஆகும்.
இதனை தொடர்ந்து தற்போது “காஃபி வித் காதல்” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், யோகி பாபு, அம்ரிதா ஆகியோர் நடித்து வருகின்றனர்.
சுந்தர். சி நல்ல நடிகரும் கூட. தலைநகரம், வீராப்பு, சண்ட, நகரம், இருட்டு ஆகிய திரைப்படங்கள் இவர் நடித்ததில் மிகவும் பிரபலமான திரைப்படங்கள் ஆகும்.
மேலும் சுந்தர். சி, ஜெய் ஆகியோர் இணைந்து நடித்த “பட்டாம்பூச்சி” திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் புதிய இயக்குனர் ஒருவரை பற்றி மிகவும் வெறுப்பாக பேசியுள்ளாராம் சுந்தர். சி.
அதாவது “இப்போது எல்லாம் ஒரு படத்தை எடுத்துட்டு ஓவரா பேசிகிறார்கள். அவர்களை பார்த்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது” என கூறியுள்ளாராம்.
மேலும் அவர் “உங்களுக்கு முன்பே பல பேர் பல விதமான திரைப்படங்களை இயக்கி உள்ளனர். நீங்க அதில் துளி கூட செய்யவில்லை. இந்த நிலையில் நீங்கள் எல்லாம் ஆடலாமா?” என கூறியுள்ளாராம்.
