Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

சுந்தர். சி-யுவன் ஷங்கர் ராஜா இணையும் புதிய படத்தின் புதிய அப்டேட்..

CINEMA

சுந்தர். சி-யுவன் ஷங்கர் ராஜா இணையும் புதிய படத்தின் புதிய அப்டேட்..

சுந்தர். சி-யுவன் ஷங்கர் ராஜா இணையும் புதிய திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக திகழ்பவர் சுந்தர். சி. இவர் 90-களில் இருந்தே பல வெற்றி திரைப்படங்களை இயக்கி வருபவர். “உள்ளத்தை அள்ளித்தா”, “மேட்டுக்குடி”, “அருணாச்சலம்”, “நான் இருவர் நமக்கு இருவர்”, “உனக்காக எல்லாம் உனக்காக”, “அன்பே சிவம்”, “கிரி”, “கலகலப்பு”, “தீயா வேலை செய்யனும் குமார்”, “அரண்மனை” என இவ்வாறு இவரின் வெற்றி திரைப்படங்களின் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும்.

சுந்தர். சி சமீப காலமாக ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், யோகி பாபு, அம்ரிதா ஆகியோரை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் அறிவிப்பு குறித்து எந்த ஒரு தகவலும் வெளியிடவில்லை.

இந்நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது. “காஃபி வித் காதல்” என்ற இந்த திரைப்படத்தில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், யோகி பாபு, ரைஸா வில்சன், ஐஸ்வர்யா தட்டா, சம்யுக்தா, மாளவிகா ஷர்மா ஆகியோர் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். யுவன் வெகு ஆண்டுகள் கழித்து சுந்தர். சி உடன் மீண்டும் இணைகிறார். சுந்தர். சி இயக்கிய “உனக்காக எல்லாம் உனக்காக”, “ரிஷி”, “வின்னர்” ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு இத்திரைப்படத்தில் யுவன் இணைகிறார்.

சுந்தர். சி திரைப்படங்களை பொருத்தவரை காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும். “மேட்டுக்குடி”, “உள்ளத்தை அள்ளித்தா”, “உனக்காக எல்லாம் உனக்காக”, “வின்னர்” ஆகிய திரைப்படங்கள் காமெடிக்கு பெயர் போன திரைப்படங்களாகும். அதே போல் “கலகலப்பு” திரைப்படமும் சுந்தர். சி கேரியரில் முக்கிய காமெடி திரைப்படம் ஆகும். இந்நிலையில் “காஃபி வித் காதல்” திரைப்படமும் காமெடியில் கலக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top