Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Stunning look-ல் வெறியேத்தும் விஜய் தேவரகொண்டா…

CINEMA

Stunning look-ல் வெறியேத்தும் விஜய் தேவரகொண்டா…

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகிவரும் “லைகர்” திரைப்படத்தின் “லைகர் ஹண்ட்” பாடல் வெளிவந்துள்ளது.

விஜய் தேவரகொண்டா தெலுங்கில் “பெல்லி சொப்புலு” திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானாலும் “அர்ஜூன் ரெட்டி” திரைப்படம் மூலம் தெலுங்கில் மட்டுமல்லாது தமிழிலும் பரவலாக அறியப்பட்டார்.

அதன் பின் தமிழில் நேரடியாக “நோட்டா” என்ற திரைப்படத்தில் நடித்தார். இவர் தெலுங்கில் செம பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர். இன்றைய இளம் பெண்களின் கனவு கண்ணனாக திகழ்பவர்.

இந்நிலையில் சமீபத்தில் மைக் டைசனும் விஜய் தேவரகொண்டாவும் இணைந்து “லைகர்” என்ற திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாக ஒரு ஆச்சரியமூட்டும் செய்தி வந்தது. இதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் முக்கிய பாடலான “லைகர் ஹண்ட்” வெளிவந்துள்ளது.

இப்பாடல் நமது உணர்ச்சிகளை தூண்டும் விதமாக மாஸ் பாடலாக அமைந்துள்ளது. “தொடங்கட்டும் வேட்ட இது நம்ம கோட்ட” என்று தொடங்குகிறது இப்பாடல். இதில் விஜய் தேவரகொண்டா சிக்ஸ் பேக்டில் மாஸ் காட்டுகிறார். மேலும் குத்துச்சண்டை வீரராக ரணகளத்தை காட்டுகிறார்.

“லைகர்” திரைப்படத்தை தெலுங்கின் பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கியிருக்கிறார். விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து மைக் டைசன் நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தின் கதாநாயகியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். இத்திரைப்படம் ஆகஸ்டு 25 ஆம் தேதி வெளிவரவுள்ளது.

“லைகர்” திரைப்படம் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் வெளிவருகிறது. இத்திரைப்படத்தை தர்மா புரொடக்சன்ஸ் சார்பாக கரண் ஜோகர் இயக்குனர் பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், அபூர்வா மேத்தா, ஹிரூ யாஷ் ஜோகர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். விக்ரம் மோன்ட்ரோஸ் “லைகர் ஹன்ட்” பாடலுக்கு இசையமைத்துள்ளார். மைக் டைசனும் விஜய் தேவரகொண்டாவும் இணைந்து நடித்துள்ளதால் இத்திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மேலும் பூரி ஜெகன்நாத்தின் திரைப்படங்களுக்கே ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in CINEMA

To Top