GOSSIPS
“குழப்ப நடிகரை முந்த நினைக்கும் நட்சத்திர நடிகர்”.. இதுக்கு தான் இத்தனை பாடு பட்டாரா?
“குழப்ப” நடிகரை முந்த நினைத்து “நட்சத்திர” நடிகர் படாத பாடு பட்ட கதையை கேளுங்க..
“குழப்ப” நடிகர் நடித்து சமீபத்தில் வெளிவந்த அந்த திரைப்படம் மாஸ் ஹிட் ஆகி உள்ளது. இதனால் “குழப்ப” நடிகர் தனது சக நடிகருக்கும் டைரக்டருக்கும் கர்ணனாக மாறி பல பரிசுகளை வழங்கி வந்தார்.
மேலும் வெற்றி விழாவெல்லாம் கொண்டாடி ஜக ஜோதியாக ஜொலித்து வருகிறார். பல வருடங்கள் கழித்து தனது திரைப்படம் ஒன்று மாபெரும் வெற்றி அடைந்ததை நினைத்து குஷியில் வானத்திற்கும் பூமிக்கும் குதித்து வருகிறார்.
இதனால் “குழப்ப” நடிகரின் நண்பரும் போட்டியாளருமான “நட்சத்திர” நடிகருக்கு தூக்கமே வரவில்லையாம். சமூக ஊடகங்களில் எங்கு திரும்பினாலும் “குழப்ப” நடிகரே தென்படுவதால் டிரெண்டிங்கில் வர என்ன செய்ய வேண்டும் என சிந்தித்து கொண்டே இருந்தாராம்.
“திண்ணையில் உட்கார்ந்திருந்தவனுக்கு திடீர் கல்யாணம்” என்பது போல் அந்த நாளும் வந்தது. அதாவது பல வருடங்களுக்கு முன் “நட்சத்திர” நடிகர் நடித்த ஒரு படம் மாபெறும் ஹிட் ஆனது. அந்த திரைப்படம் வெளியாகி 15 வருடங்கள் முடிந்துள்ள நிலையில் ரஜினி ரசிகர்கள் அத்திரைப்படத்தை நினைவு கூர்ந்து இணையத்தில் பேசி வந்தனர்.
இதனை கப் என பிடித்த “நட்சத்திர” நடிகர் இது தான் சரியான நேரம், இதை விட்டால் சரி வராது என நினைத்து , அந்த மாபெரும் வெற்றிப் பெற்ற திரைப்படத்தின் “ஹாலிவுட்” இயக்குனரை அழைத்து பேசி ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டார். சும்மா கிடந்த படத்தை திடீரென்று “நட்சத்திர” நடிகர் கொண்டாட இது தான் காரணம் என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றது.