CINEMA
“வலிமை படம் எனக்கு பிடிக்காது,ஆனால்??… மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஸ்ரீநிதி
சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி “வலிமை” திரைப்படம் குறித்து மீண்டும் சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன் அஜித் நடிப்பில் வெளியான “வலிமை” திரைப்படத்திற்கு ஓரளவு நெகட்டிவ் ரிவ்யூக்களே வந்தன. எனினும் அஜித் ரசிகர்கள் அத்திரைப்படத்தை தூக்கி வைத்து கொண்டாடினர்.
இந்நிலையில் சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி “வலிமை” திரைப்படம் வெளியானதை தொடர்ந்து அந்த திரைப்படம் தனக்குப் பிடிக்கவில்லை என ஒரு வீடியோவில் கூறியிருந்தார்.
அந்த வீடியோ இணையத்தில் வெறித்தனமாக வைரல் ஆக ஸ்ரீநிதியை அஜித் ரசிகர்கள் மிகவும் மோசமாக விமர்சித்தனர். இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் “வலிமை” திரைப்படத்தை குறித்து பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார் ஸ்ரீநிதி.
ஸ்ரீநிதி சில நாட்களுக்கும் முன் தான் சிம்புவை காதலிப்பதாக கூறி வந்தார். சிம்புவின் வீட்டிற்கு முன் சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து சில சின்னத்திரை நடிகர்களை குறித்து சர்ச்சையாக பேசி வந்தார்.
அதனை தொடர்ந்து அவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூட தகவல்கள் வந்தது. இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில் ஸ்ரீநிதி “திரைப்படங்களை விமர்சனம் செய்வதற்கு நான் பெரிய ஆள் இல்லை. ஆனால் வலிமை திரைப்படம் ஒரு படம். அதனை விமர்சனம் செய்வதற்கு யாருக்கு வேண்டுமானாலும் உரிமை உண்டு” என கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர் “இப்போதும் என்னை கேட்டால் வலிமை சுமாரான படம் என்று தான் கூறுவேன். ஆனால் அது எனக்கு பிடித்த படம் இல்லை என்றாலும் இந்த சொசைட்டிக்கு தேவையான படம். போதை பொருளுக்கு எதிரான படம்” என கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram
