HOLLYWOOD
வெறித்தனமான கொரியன் வெப் சீரீஸின் இரண்டாம் பாகம் குறித்த புதிய அப்டேட்..?
பிரபல கொரியன் வெப் சீரீஸான “ஸ்குவிட் கேம்” வெப் சீரீஸின் இரண்டாம் பாகத்திற்கான புதிய அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது.
தென் கொரிய திரைப்படங்களை குறித்தும் டிராமாக்களை குறித்தும் சொல்லவே தேவை இல்லை. பரவலாக உலக சினிமா ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படுபவை. காதல், செக்ஸ், வைலன்ஸ், மிஸ்ட்ரி, திரில்லர், ஹாரர் என எல்லா வகையறாக்களிலும் சும்மா பொளந்து கட்டுவார்கள் கொரியர்கள். பல கொரிய திரைப்படங்களை தமிழில் கூட காப்பி அடித்திருக்கிறார்கள்.
அந்த அளவுக்கு சுவாரஸியமாக பார்வையாளர்களை கவரும் வண்ணம் திரைக்கதையை அமைப்பார்கள். கொரியன் டிராமாக்களை பொறுத்த வரை உலகளாவிய பெரும் வணிகம் உண்டு. உலகளவில் கொரியன் டிராமாக்களை ரசித்து பார்ப்பவர்கள் பல பேர் உண்டு.
இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் “ஸ்குவிட் கேம்” என்ற வெப் சீரீஸ் வெளிவந்தது. பணத் தேவையால் உந்தப்பட்ட பலர் ஒரு புதிரான விளையாட்டுகளை விளையாடுமாறு தள்ளப்படுகிறார்கள். அதில் கடைசி வரை வென்று யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு பல கோடி வரை பரிசாக வழங்கப்படும். பல ரவுண்டுகள் விளையாடப்படும் இந்த விளையாட்டில் தோற்றவர்கள் சாகடிக்கப்படுவார்கள்.
கதாநாயகன் இறுதி வரை நின்று ஜெயித்தாரா? இந்த விளையாட்டின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டதா? என்பது தான் கதை. மிகவும் சுவாரசியமான திரைக்கதை அமைப்பால் இந்த வெப் சீரீஸ் உலகம் முழுவதும் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வேற லெவல் ஹிட் ஆனது.
இந்நிலையில் தற்போது “ஸ்குவிட் கேம்” வெப் சீரீஸின் இரண்டாம் பாகம் குறித்தான ஒரு அப்டேட் வீடியோ வெளிவந்துள்ளது. ஆனால் அதில் வெளியீடு குறித்தான எந்த தகவலும் இல்லை. அந்த வீடியோ இதோ…
IT’S A GREEN LIGHT 🚦
Squid Game will return for a season 2 🦑 pic.twitter.com/NkC02KtMgY— Netflix India (@NetflixIndia) June 12, 2022
Anonymous
June 14, 2022 at 4:58 PM
good