CINEMA
அஜித் வருகிறார் வாருங்கள்… மகிழ்ச்சியில் கூடிய ரசிகர்கள்.. ஆனால் வந்தது யார் என தெரியுமா?
அஜித் ஒரு பிரபலமான கோவிலுக்கு வருகிறார் என்று செய்தி பரவிய நிலையில் அலைக்கடல் என மக்கள் கூடினர். ஆனால் வந்தது யார் என்று தெரியுமா?
அஜித் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் “AK61” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவனுடன் இணையவுள்ளார்.
அஜித் குமார் மிகவும் கடவுள் பக்தி உடையவர். சமீபத்தில் கூட கேரளாவில் ஒரு பிரபலமான கோவிலில் அவர் தரிசனம் செய்வது போன்ற புகைப்படங்கள் வெளியாகின.
இந்நிலையில் அஜித் குமார் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வருகிறார் என்று ஒரு செய்தி பரவியதாம். ஏற்கனவே ஆடி மாதம் என்பதால் பக்தர்கள் திரளாக இருந்தனர். இந்த நிலையில் தான் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அஜித் வருகிறார் என செய்தி பரவியுள்ளது.
இதனால் பக்தர்களோடு ரசிகர் கூட்டமும் சேர்ந்ததனால் கூட்டம் அதிகமானது. இந்நிலையில் திடீரென்று ஒரு இடத்தில் ரசிகர்கள் ஒரு பிரபலத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனராம். அது யார் என்று பார்த்தால் அஜித் இல்லை. அந்த பிரபலம் யாஷிகா ஆனந்த்.
அப்போது தான் தெரியவந்தது அஜித் வருகிறார் என்பது ஒரு வதந்தி என்று. அஜித் வருகிறார் என்று எப்படி வதந்தி பரவியது என தெரியவில்லையாம். எனினும் யாஷிகா ஆனந்தை எதிர்பார்க்காத ரசிகர்கள் மகிழ்ச்சியில் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
இந்த செய்தி இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. மேலும் இச்சம்பவம் ஒரு நகைச்சுவையான சம்பவமாகவும் அமைந்துள்ளது. யாஷிகா ஆனந்த் வந்ததால் யாஷிகா ஆனந்த் ரசிகர்கள் குஷி அடைந்தனர். ஆனால் அஜித் ரசிகர்களுக்கு தான் பெருத்த ஏமாற்றம்.
