CINEMA
ரஜினிக்கு சிறப்பான தரமான ஒரு விருது.. என்னவென்று தெரியுமா?
ரஜினிகாந்திற்கு வருமான வரித்துறை சார்பாக விருது ஒன்று வழங்கப்பட்டுள்ளது. ஏன் என தெரியுமா?
ரஜினிகாந்திற்கு திரைத்துறை சம்பந்தமாக பல விருதுகள் கிடைத்துள்ளது. எனினும் தற்போது ஒரு புதுவிதமான விருது ஒன்று ரஜினிக்கு கிடைத்துள்ளது.
அதாவது இந்த விருதை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் வழங்கியுள்ளார். ரஜினிக்கு பதிலாக அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அந்த விருதை பெற்றுக்கொண்டார். தமிழகத்தில் அதிகமான வருமான வரி செலுத்தியதற்காக ரஜினிகாந்திற்கு வருமான வரித்துறை இந்த விருதை வழங்கியுள்ளது.
@LGov_Puducherry @TelanganaGuv @DrTamilisaiGuv felicitating the tax payers including @rajinikanth during the Income Tax Day celebrations at Chennai today. Chief Justice of Madras High Court, Justice Munishwar Nath Bhandari and Pr. Chief Comm of @tn_incometax is also seen pic.twitter.com/9Z4Ojhnwph
— PIB in Tamil Nadu (@pibchennai) July 24, 2022
ரஜினிகாந்த் தற்போது “ஜெயிலர்” திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இதில் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், சிவ ராஜ்குமார், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கே எஸ் ரவிக்குமார் இத்திரைப்படத்தின் திரைக்கதையில் நெல்சனுடன் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
“பீஸ்ட்” திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் ரஜினியை வைத்து இயக்குவதாக அறிவிப்பு வெளிவந்தது. “பீஸ்ட்” திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றிருந்தாலும், ரசிகர்களுக்கு அத்திரைப்படம் திருப்தி அளிக்கவில்லை.
ஆதலால் விஜய் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்தனர். இதனை தொடர்ந்து நெட்டிசன்கள் இயக்குனர் நெல்சனை கேலி செய்து பல மீம்களை இறக்கி வந்தனர்.
“பீஸ்ட்” திரைப்படத்திற்கு நெகட்டிவ் ரிவ்யூக்களே அதிகம் வந்ததால் ரஜினி நெல்சன் திரைப்படத்தில் இருந்து விலகி விடுவார் என வதந்தி பரவியது. ஆனால் ரஜினி-நெல்சன் கூட்டணி கன்ஃபார்ம் ஆனது.
நெல்சன் இயக்கும் “ஜெயிலர்” திரைப்படம் வருகிற 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வெளிவரும் என கூறப்படுகிறது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு சிறைச்சாலையில் நடப்பது போல் எடுக்கப்படுகிறது என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.