CINEMA
தேசிய விருதுகளை வாரி குவித்த சூரரைப் போற்று…
தேசிய விருதுகளை வாரி குவித்த “சூரரைப் போற்று” திரைப்படம். எத்தனை விருதுகள் தெரியுமா?
“சூரரை போற்று” திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. இத்திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார். 2D என்டெர்ட்யின்மென்ட் சார்பாக சூர்யா-ஜோதிகா ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரித்தனர்.
“சூரரைப் போற்று” திரைப்படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, காளி வெங்கட், ஊர்வசி ஆகிய பலரும் நடித்திருந்தனர். ஜி வி பிரகாஷ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனது. குறிப்பாக “கையிலே ஆகாசம்”, “காட்டுப் பயலே” போன்ற பாடல்கள் பரவலாக அனைவராலும் ரசிக்கப்பட்டது.
இந்நிலையில் “சூரரை போற்று” திரைப்படம் 5 தேசிய விருதுகளை பெறவுள்ளது. அதாவது சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூர்யா பெறுகிறார். இந்த விருதை “தனாஜி” திரைப்படத்திற்காக அஜய் தேவ்கனுடன் சூர்யா பகிர்கிறார்.
சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை அபர்ணா பாலமுரளி பெறுகிறார். சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை ஜி வி பிரகாஷ் பெறுகிறார். சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை சுதா கொங்கரா பெறுகிறார். சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் சூரரை போற்று பெறுகிறது. இவ்வாறு 5 தேசிய விருதுகளை “சூரரைப் போற்று” பெருகிறது.
மேலும் “மண்டேலா” திரைப்படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குனர் விருதை இயக்குனர் மடோனா அஸ்வின் பெறுகிறார். மேலும் சிறந்த எடிட்டிங்கான தேசிய விருதை “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” என்ற திரைப்படத்திற்காக எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் பெறுகிறார்.
தமிழில் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படத்திற்காக லட்சுமி பிரியா சந்திரமௌலி பெறுகிறார். தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான விருதும் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படம் பெறுகிறது.