Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

பா ரஞ்சித், சிம்பு தேவன், வெங்கட் பிரபு, ராஜேஷ்… கலக்கல் காம்போவில் ஒரு திரைப்படம்..

CINEMA

பா ரஞ்சித், சிம்பு தேவன், வெங்கட் பிரபு, ராஜேஷ்… கலக்கல் காம்போவில் ஒரு திரைப்படம்..

பா ரஞ்சித், சிம்பு தேவன், வெங்கட் பிரபு, ராஜேஷ் ஆகியோரின் இயக்கத்தில் ஒரு திரைப்படம் வெளிவர உள்ளது.

Anthology வகையரா திரைப்படங்கள் வெளிவருவது தற்போது மிகவும் சகஜமாகி வருகிறது. பல குறும்படங்களை ஒன்றாக இணைத்து இரண்டு அல்லது இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய அளவில் முழு நீள திரைப்படம் போல் வெளியிடுவார்கள்.

“பெஞ்ச் ஃப்ளிக்ஸ்” என்ற திரைப்படம் தான் பல வருடங்களுக்கு முன்பு தமிழில் வெளிவந்த Anthology திரைப்படம். அதன் பின் இந்த வகையராவில் “அவியல்” என்ற திரைப்படம் வெளிவந்தது.

அதனை தொடர்ந்து ஹலிதா சமீம் இயக்கத்தில் “சில்லு கருப்பட்டி” என்ற திரைப்படம் வெளியானது. அதன் பின் “புத்தம் புது காலை”, “பாவக் கதைகள்”, “நவரசா”, “புத்தம் புது காலை விடியாதா?” என பல திரைப்படங்கள் வெளிவந்தது.

சமீபத்தில் சிம்பு தேவன் இயக்கிய “கசட தபற” என்ற Anthology வகையரா திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியானது. இயக்குனர் வசந்த் இயக்கிய “சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்” என்ற திரைப்படமும் Anthology வகையராவில் சோனி லைவ்வில் வெளிவந்தது.

இந்நிலையில் மீண்டும் சோனி லைவ்வில் ஒரு தரமான Anthology திரைப்படம் வெளிவர உள்ளது. இத்திரைப்படத்திற்கு “விக்டிம்” என பெயர் வைத்துள்ளனர். இதில் “மிரேஜ்”, “தம்மம்”, “கொட்டை பாக்கு வத்தலும் மொட்டை மாடி சித்தரும்”, “கன்ஃபஷன்” ஆகிய திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளது.

இதில் “மிரேஜ்” திரைப்படத்தை ராஜேஷ் இயக்கி உள்ளார். பிரியா பவானி ஷங்கர், நட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

“தம்மம்” திரைப்படத்தை பா ரஞ்சித் இயக்கி உள்ளார். இதில் கலையரசன், குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்துள்ளனர்.

 “கொட்டை பாக்கு வத்தலும் மொட்டை மாடி சித்தரும்” திரைப்படத்தை சிம்பு தேவன் இயக்கி உள்ளார். தம்பி ராமையா, நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

“கன்ஃபஷன்” திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். இதில் அமலா பால், பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.

“விக்டிம்” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 5 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. தற்போது இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் வெளியாகியுள்ளது.

                 

Continue Reading

More in CINEMA

To Top