CINEMA
“எனக்கு கல்யாணம், எனக்கு கல்யாணம்” மோதிரத்தை காட்டி ரசிகர்களை கடுப்பேத்தும் லிங்கா நடிகை
“லிங்கா” திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நடிகை சோனாக்சி சின்ஹா தனக்கு ஒரு ஆணுடன் நிச்சயம் ஆகி உள்ளதாக கூறியுள்ளார். ஆனால் அது உண்மையா என்று தெரியாமல் ரசிகர்கள் கடுப்படைந்துள்ளனர். ஏன் தெரியுமா?
பாலிவுட்டின் முக்கிய கதாநாயகியாக திகழும் சோனாக்சி சின்ஹா தமிழில் ரஜினிகாந்த் நடித்த “லிங்கா” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவரின் தந்தை சத்ருகன் சின்ஹா பாலிவுட்டின் முக்கிய நடிகரும் அரசியல்வாதியும் ஆவார்.
இந்நிலையில் சோனாக்சி சின்ஹா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனக்கு ஒரு ஆணுடன் நிச்சயம் ஆகி உள்ளதாக ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் கையில் மோதிரத்துடன் காட்சி தருகிறார். அப்புகைப்படத்தில் ஒரு ஆணின் கை மட்டும் தெரிகிறது. அவர் யார் என்று தெரியவில்லை. ஆதலால் அவர் ரசிகர்களை ஏமாற்றுகிறார் என கடுப்படைந்துள்ளனர்.
ஆனால் அவரது இன்ஸ்டா பக்கத்தில் அப்புகைப்படங்களுடன் “இது எனக்கு ஒரு பெரிய நாள். என்னுடைய மிகப்பெரிய கனவு நினைவாகப் போகிறது. உங்களிடம் இதை பகிர்ந்து கொள்ளும் வரை என்னால் இந்த சந்தோஷத்தை பொருத்துக்கொள்ள முடியவில்லை. மேலும் என்னாலே இதை நம்பமுடியவில்லை” என பதிவிட்டு உள்ளார்.
சோனாக்சி சின்ஹா பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர். ஹிந்தி திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வருகிறார். ஷாகித் கபூருடன் “சாரி கே ஃபால் ஸா” என்ற பாடலில் அவர் குத்தாட்டம் ஆடியது இந்தியாவை கலங்கடித்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் இப்பாடலை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அப்பாடல் இடம்பெற்ற திரைப்படமான “ஆர்…ராஜ்குமார்” நமது டான்ஸ் மாஸ்டர் பிரபு தேவா இயக்கிய திரைப்படமாகும். சோனாக்சி சின்ஹா சல்மான் கானுடன் நடித்த “டபாங்க்” திரைப்படம் அவருக்கு மிகப் பெரிய திருப்புமுனையை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
