GALLERY
காத்து வாங்கும் உடையில் ரஜினி பட நடிகை.. ஹாட் புகைப்படங்கள்
காத்து வாங்கும் உடையில் ரஜினி திரைப்பட நடிகை சோனாக்சி சின்ஹா வெளியிட்ட கிளாமர் புகைப்படங்களை பார்க்கலாம்.
சோனாக்சி சின்ஹா பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர். ஹிந்தி திரைப்பட உலகின் பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வருகிறார்.
ஷாகித் கபூருடன் “சாரி கே ஃபால் ஸா” என்ற பாடலில் அவர் குத்தாட்டம் ஆடியது இந்தியாவையே கலங்கடித்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் இப்பாடலை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
அப்பாடல் இடம்பெற்ற திரைப்படமான “ஆர்…ராஜ்குமார்” நமது டான்ஸ் மாஸ்டர் பிரபு தேவா இயக்கிய திரைப்படமாகும். சோனாக்சி சின்ஹா சல்மான் கானுடன் நடித்த “டபாங்க்” திரைப்படம் அவருக்கு மிகப் பெரிய திருப்புமுனையை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட்டில் செம மார்க்கெட்டில் இருக்கும் சோனாக்சி சின்ஹா தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த “லிங்கா” திரைப்படம் மூலம் என்ட்ரி கொடுத்தார். ஆனால் அத்திரைப்படம் சரியாக எடுபடவில்லை. அதன் பின் தமிழுக்கு மீண்டும் வரவே இல்லை.
சோனாக்சி சின்ஹா திரை துறையில் தனது பயணத்தை தொடங்கிய போது அவர் உடல் வாகு அனைவராலும் கிண்டல் செய்யப்பட்டது. ஆனால் அந்த கிண்டல்களை எல்லாம் பொருட்படுத்தாமல் சில ஆண்டுகளிலேயே மாடலுக்கு நிகரான கச்சிதமான உடல் அமைப்பை கொண்டு வந்தார். பாலிவுட்டே அதனை பார்த்து ஆச்சரியப்பட்டது.
இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தை எப்போதுமே பிசியாக வைத்திருக்கும் சோனாக்சி சின்ஹா சமீபத்தில் வண்ண வண்ண உடையில் காத்து வாங்கும் அளவுக்கான சைசில் சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அப்புகைப்படங்கள் பார்ப்போரின் மனதை கொள்ளை கொண்டுள்ளது. இன்ஸ்டாவில் ஒரு கவர்ச்சி பிரளயத்தையே அப்புகைப்படங்கள் உண்டு பண்ணி உள்ளது.
சோனாக்சி சின்ஹா அப்புகைப்படங்களில் வழவழப்பான கெண்டை காலுடன் அப்பட்டமாக வலம் வருகிறார். அப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.