Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

SK21 Update: யார் ஹீரோயின் தெரியுமா??

CINEMA

SK21 Update: யார் ஹீரோயின் தெரியுமா??

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் 21 ஆவது திரைப்படத்தின் கதாநாயகி யார் தெரியுமா?

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்னேஷனல் சார்பாக கமல்ஹாசனுடன் சோனி பிக்சர்ஸ் மற்றும் டர்மரிக் மீடியா ஆகியோர் இணைந்து சிவகர்த்திகேயனின் 21 ஆவது திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு அப்டேட் வந்தது.

இதனைத் தொடர்ந்து இத்திரைப்படத்தை இயக்கப்போவது ராஜ்குமார் பெரியசாமி என்ற தகவலும் வந்தது. இவர் விஜய் தொலைக்காட்சியில் சிவகார்த்திகேயன் பணியாற்றியபோது அவருடன் இணைந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இத்திரைப்படம் குறித்து மற்றும் ஒரு முக்கியமான தகவல் வெளிவந்துள்ளது. ஆம். இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிக்கப்போகும் கதாநாயகி யார் என்ற அப்டேட் வந்துள்ளது.

சிவகார்த்திகேயனின் 21 ஆவது திரைப்படத்தின் கதாநாயகியாக சாய் பல்லவி இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது. இத்தகவலை கமல்ஹாசன் தனது சமூகவலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

இத்திரைப்படம் ராஜ்கமல் ஃபிலிம்ஸின் 51 ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. சாய் பல்லவிக்கு தற்போது “கார்கி” மற்றும் “விராட பர்வம்” ஆகிய திரைப்படங்கள் வெளிவர தயார் நிலையில் உள்ளன. நேற்று சாய் பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு “கார்கி” திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளிவந்தது. “கார்கி” திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளிவருகிறது.

மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான “டான்” திரைப்படம் வருகிற மே 13 ஆம் தேதி வெளிவர உள்ளது. “டான்” திரைப்படத்தில் பிரியங்கா மோகன் ஜோடியாக நடித்துள்ளார். எஸ். ஜே. சூர்யா, ராதா ரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் SK21-ல் சாய் பல்லவி இணைவதாக அப்டேட் வந்துள்ளது. இத்திரைப்படம் பேன் இந்திய திரைப்படமாக உருவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top