CINEMA
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை…?
சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படத்தில் பிரபல பாலிவுட் கதாநாயகி ஒருவர் ஜோடியாக உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த “டான்” திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸ் 100 கோடிக்கும் மேல் அள்ளிக் கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து இயக்குனர் அனுதீப் கே. வி. இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
அதனை தொடர்ந்து ‘SK21” திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இத்திரைப்படத்தை கமல் ஹாசன் தயாரிக்கிறார். மேலும் சாய் பல்லவி சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக இணைகிறார்.
இந்நிலையில் தற்போது “SK 22” திரைப்படம் குறித்தான முக்கிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தை “மண்டேலா” என்ற திரைப்படத்தை இயக்கிய மடோன்னே அஸ்வின் இயக்குவதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கெயிரா அத்வானி நடிக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கெயிரா அத்வானி பாலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக அறியப்படுபவர். “MS Dhoni” திரைப்படத்தில் அவர் நடிப்பு பிரபலமாக அறியப்பட்டது. மேலும் அதை தொடர்ந்து பல ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தென்னிந்திய திரைப்படங்களை பொறுத்தவரை தெலுங்கு திரைப்படங்களான மகேஷ் பாபு நடித்த “பரத் என்னே நானு”, ராம் சரண் நடித்த “வினய விதேய ராமா” போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ராம் சரணின் “RC15” திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் படத்தின் மூலம் கெயிரா அத்வானி தமிழுக்கு என்ட்ரி கொடுக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திரைப்படம் குறித்தான அதிக தகவல்கள் வெளிவரவில்லை. இந்நிலையில் கெயிரா அத்வானியின் தமிழ்நாட்டு ரசிகர்கள் இச்செய்தியை கேட்டு குஷியில் உள்ளனர்.
