CINEMA
அப்படியே ரஜினி போலவே இருக்கார் சிவகார்த்திகேயன்.. நெட்டிசன்கள் முணுமுணுப்பு
சிவகார்த்திகேயன் அந்த படத்தில் ரஜினிகாந்த் போலவே இருக்கிறார் என நெட்டிசன்கள் முணுமுணுத்து வருகின்றனர்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வருகிற தீபாவளி அன்று “பிரின்ஸ்” திரைப்படம் வெளியாகிறது. இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் மரியா, சத்யராஜ், ஆகியோர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தை அனுதீப் கே வி இயக்கி உள்ளார். தமன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் வெளிவருகிறது.
இந்நிலையில் இத்திரைப்படத்தை தொடர்ந்து கமல் ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சோனி பிக்சர்ஸுடன் இணைந்த தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக அறிவிப்பு வந்தது. இத்திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார்.
அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் “மண்டேலா” இயக்குனர் மடோன்னே அஸ்வின்னுடன் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார் என தகவல் வந்தது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ ஒன்று நேற்று வெளிவந்தது.
இத்திரைப்படத்திற்கு “மாவீரன்” என பெயர் வைத்திருக்கின்றனர். இந்த அறிவிப்பு வீடியோவை பார்க்கும் போது இத்திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு வித்தியாசமான ஆக்சன் திரில்லராக அமையவுள்ளதாக தெரிகிறது.
இதில் சிவகார்த்திகேயன் “தளபதி” திரைப்படத்தின் ரஜினி போன்ற கெட் அப்பில் இருக்கிறார் என ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே போல் ரஜினிகாந்த் “மாவீரன்” என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
ஆதலால் சிவகார்த்திகேயன் ரஜினிகாந்த் போல் இருக்கிறார் என பேச்சுக்கள் எழுகின்றன. மேலும் இந்த வீடியோவின் இறுதியில் காமிக்ஸ் புத்தகத்தில் இந்த காட்சிகள் எல்லாம் இடம்பெற்றுள்ளது போல் காண்பிக்கப்படுகிறது. இதனை கொண்டு காமிக்ஸில் வரையப்பட்ட கதை நிஜத்தில் நடப்பது போன்ற கதையாக இருக்கலாம் என வியூகிக்கப்படுகிறது. “மாவீரன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
