Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

சிவாஜி வீட்டில் எழுந்த சொத்து பிரச்சனை.. நீதிமன்றம் சென்ற மகள்கள்..

CINEMA

சிவாஜி வீட்டில் எழுந்த சொத்து பிரச்சனை.. நீதிமன்றம் சென்ற மகள்கள்..

நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள், சொத்து பிரச்சனை காரணமாக தனது அண்ணன்களான பிரபு, ராம்குமார் ஆகியோரை எதிர்த்து நீதிமன்றம் சென்றுள்ளனர்.

நடிகர் சிவாஜி கணேசன் நடிப்புக்கென்றே பெயர் போன தமிழின் முன்னணி கதாநாயகர். இவரை நடிப்பு பள்ளி என்றே அழைப்பார்கள். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் உலக சினிமாவையே தன்னுடைய அசாத்திய நடிப்பால் திரும்பி பார்க்க வைத்தவர் சிவாஜி கணேசன்.

சிவாஜி கணேசனுக்கு ராம்குமார், பிரபு ஆகிய இரண்டு மகன்களும், சாந்தி, ராஜ்வி ஆகிய இரு மகள்களும் உள்ளனர். ராம்குமார் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரபு தமிழின் முன்னணி நடிகர்களுள் ஒருவர். அதே போல் பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவுக்கு சமீபத்தில் வெளிவந்த “டாணாக்காரன்” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. மேலும் விக்ரம் பிரபுவுக்கு “பாயும் ஒளி நீ எனக்கு”, “பொன்னியின் செல்வன்” ஆகிய திரைப்படங்கள் வெளிவர தயாராக உள்ளன.

இந்நிலையில் தற்போது சாந்தி, ராஜ்வி ஆகியோர் தங்களது அண்ணன்களை எதிர்த்து நீதிமன்றப் படிகளை ஏறியுள்ளனர். அதாவது தந்தை சிவாஜி கணேசன் தான் சம்பாதித்த சொத்து சம்பந்தமாக அவர் எந்த உயிலையும் எழுதி வைக்கவில்லை எனவும் ஆனால் பிரபுவும் ராம்குமாரும் போலியான உயிலை காட்டி தங்களை ஏமாற்றிவிட்டதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதே போல் 10 கோடி மதிப்புள்ள வெள்ளி மற்றும் தங்கப் பொருட்களை தங்களுக்கு தரவில்லை எனவும் மேலும் ராயப்பேட்டையில் உள்ள நான்கு வீடுகளில் இருந்து வரும் வாடகையில் தங்களுக்கு எந்த பங்கும் அளிக்கவில்லை எனவும் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த செய்தியால் திரை உலகமே அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top