CINEMA
துல்கர் சல்மானுக்கு வந்த காதல் கடிதம்..? எழுதியது யாரா இருக்கும்?
துல்கர் சல்மானுக்கு வந்த காதல் கடிதத்தை எழுதியது யாராக இருக்கும்?
துல்கர் சல்மான் நடிப்பில் வருகிற ஆகஸ்து மாதம் 5 ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் “சீதா ராமம்”. இத்திரைப்படத்தில் துல்கர் சல்மானுடன் ராஷ்மிகா மந்தனா. மிர்னால் தாக்கூர் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. டீசர் ஆரம்பத்தில் 1965 ஆம் வருடம் என காட்டப்படுகிறது. இதில் துல்கர் சல்மான் ஒரு ராணுவ வீரனாக நடிக்கிறார். அவர் பெயர் ராம். ராணுவ வீரனாக எல்லையில் இருக்கும் துல்கர் சல்மானுக்கு யாரும் உறவினர்கள் இல்லை.
ஆனால் அவருக்கு சீதா என்ற பெயரில் ஒரு கடிதம் வருகிறது. அக்கடிதத்தில் “அன்புள்ள ராம். உங்களுக்கு யாரும் இல்லையா? அது பொய் இல்லையா? நீங்கள் கட்டிய தாலி என் மார்போடு உரசி மனதோடு பேசிக் கொண்டிருப்பதை மறந்துவிட்டீர்களா?” என எழுதியிருக்கிறது.
அந்த கடிதத்தின் இறுதியில் “காதல் மனைவி சீதா மகாலட்சுமி” என குறிப்பிட்டுள்ளது. துல்கர் சல்மானுக்கு இதை யார் எழுதியிருப்பார் என்ற ஆவல் ஏற்படுகிறது. இவ்வாறு அந்த டீசர் அமைந்துள்ளது.
இதன் மூலம் ஒரு Fresh ஆன காதல் திரைப்படம் நமக்கு விருந்தாக காத்துக் கொண்டிருக்கிறது என வியூகிக்கலாம். “சீதா ராமம்” டீசரில் வரும் பனிக்காட்சிகள் மனதை குதூகலப்படுத்துவதாய் இருக்கிறது. இந்த முழு திரைப்படமும் அந்த பனியை போல் குதூகலப்படுத்தும் என எதிர்பார்க்கபடுகிறது.
“சீதா ராமம்” திரைப்படத்தை ஹனு ராகவபுடி இயக்கி உள்ளார். விஷால் சந்திரசேகர் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பி எஸ் வினோத், ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். வைஜயந்தி மூவீஸ் சார்பாக அஸ்வினி தட் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
“சீதா ராமம்” திரைப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.
