Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

அந்த பாலிவுட் நடிகைக்கு கொக்கி போட்ட சிறுத்தை சிவா…! யார் ஹீரோயின் தெரியுமா?

CINEMA

அந்த பாலிவுட் நடிகைக்கு கொக்கி போட்ட சிறுத்தை சிவா…! யார் ஹீரோயின் தெரியுமா?

சிறுத்தை சிவா-சூர்யா கூட்டணியில் இணைந்த அந்த பாலிவுட் நடிகை. இவங்க சும்மா கிளாமரை தூக்கி காட்டுவாங்களே.

சிறுத்தை சிவா, சூர்யாவை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாக சமீப நாட்களாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் இதற்கு முன் சூர்யா நடித்த “மாயாவி”, “ஆறு”, “சிங்கம் 1”, “சிங்கம் 2” ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது 5 ஆவது முறையாக தேவி ஸ்ரீ பிரசாத் சூர்யாவுடன் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கூட இத்திரைப்படம் குறித்து ஒரு மாஸ் அப்டேட் வெளிவந்தது. அதாவது இத்திரைப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வந்தன. மேலும் தந்தை-மகன் பாசத்தை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. தந்தை, மகன் என்ற இரு வேடங்களிலும் சூர்யாவே நடிக்க உள்ளதாக வியூகிக்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் கதாநாயகி குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட்டின் டாப் கிளாமர் நடிகையான திஷா படானி நடிக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இயக்குனர் சிவா “சிறுத்தை, “ வேதாளம்”, “வீரம்”, “விவேகம்”, விஸ்வாசம்” என பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தவர். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து “அண்ணாத்த” என்ற திரைப்படத்தை இயக்கினார்.

ஆனால் அத்திரைப்படம் சரியாக எடுபடவில்லை. “அண்ணாத்த” திரைப்படம் பொருளாதார வெற்றியை பெற்றிருந்தாலும் ரசிகர்களுக்கு திருப்தியை கொடுக்கவில்லை. எங்கு திரும்பினாலும் நெகட்டிவ் ரிவ்யூக்களே வந்தன. இந்த நிலையில் தான் சிறுத்தை சிவா சூர்யாவை வைத்து இயக்க உள்ளதாக தகவல் வருகின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top