CINEMA
சிறுத்தை சிவாவுடன் சூர்யா இணைய உள்ள படம் ட்ராப்? என்னப்பா சொல்றீங்க?
சிறுத்தை சிவா –சூர்யா இணையும் புதிய திரைப்படம் ட்ராப் என பரவிய செய்தியின் உண்மைத் தன்மை என்ன?
இயக்குனர் சிவா “சிறுத்தை, “ வேதாளம்”, “வீரம்”, “விவேகம்”, விஸ்வாசம்” என பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தவர். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து “அண்ணாத்த” என்ற திரைப்படத்தை இயக்கினார்.
ஆனால் அத்திரைப்படம் சரியாக எடுபடவில்லை. “அண்ணாத்த” திரைப்படம் பொருளாதார வெற்றியை பெற்றாலும் ரசிகர்களுக்கு திருப்தியை கொடுக்கவில்லை. எங்கு திரும்பினாலும் நெகட்டிவ் ரிவ்யூக்களே வந்தன.
இதனை தொடர்ந்து விஜய்யும் சிறுத்தை சிவாவும் சந்தித்ததாக செய்திகள் தெரிவித்தன. சிவா இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார் எனவும் கூறப்பட்டது. ஆனால் அதன் உண்மைத் தன்மை குறித்து தெரியவில்லை.
இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் சமீபத்தில் அத்திரைப்படம் ட்ராப் ஆகிவிட்டது என்று வதந்தி பரவியது.
எனினும் அத்திரைப்படம் ட்ராப் ஆகவில்லை எனவும், அத்திரைப்படத்தை பிரம்மாண்டமாக உருவாக்க சிறுத்தை சிவா திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
சூர்யா சமீபத்தில் பாண்டிராஜ் இயக்கத்தில் “எதற்கும் துணிந்தவன்” என்ற திரைப்படத்தில் நடித்தார். அத்திரைப்படம் ஓரளவு கலவையான விமர்சனங்களையே பெற்றன. எனினும் அதற்கடுத்து “விக்ரம்” திரைப்படத்தில் “ரோலக்ஸ்” என்ற கேமியோ ரோலில் நடித்தார். அது வேற லெவல் ரெஸ்பான்ஸை அள்ளியது.
குறிப்பாக “விக்ரம்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல் ஹாசன் சூர்யாவிற்கு “ரோலக்ஸ்” வாட்ச்சை பரிசாக அளித்தார். அந்தளவிற்கு “ரோலக்ஸ்” கதாப்பாத்திரம் பேசப்பட்டது. இந்நிலையில் சிறுத்தை சிவாவுடன் சூர்யா இணைவதாக தகவல் வந்துள்ளது. இத்திரைப்படமும் மாபெரும் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல் சூர்யா “சூரரை போற்று” ஹிந்தி ரீமேக்கிலும் கேமியோ ரோலில் வருகிறார். அத்திரைப்படத்தை 2D Entertainment சார்பாக சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து தயாரிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.