GOSSIPS
Divorce-க்கு அப்புறம் ஏறுமுகம் தான்.. Single நடிகைக்கு வந்த வாழ்வை பாருங்க..
“Single” நடிகைக்கு விவாகரத்திற்கு பின் படு ஜோராக மார்க்கெட் முன்னேறியுள்ளதாம்.
தமிழ் மட்டுமல்லாது “பக்கத்து” மாநிலத்திலும் படு பயங்கரமான மார்க்கெட்டுடன் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமீபத்தில் தனது கணவரை டைவர்ஸ் செய்து “Single” நடிகையாக மாறினார்.
விவாகரத்திற்கு முன் அந்த “பாம்பு” நடிகருடன் நடந்த திருமண வாழ்க்கையில் அவர்களுக்குள் குடும்ப சண்டைகள் பல வந்ததுவாம். பின்பு “பாம்பு” நடிகர் வேண்டாம் என்று முடிவெடுத்து விவாகரத்து செய்தாராம். மேலும் தனக்கு ஜீவனாம்சம் வேண்டாம் என்றும் முடிவெடுத்ததாகவும் கூறப்பட்டது.
சமீபத்தில் “பக்கத்து” மாநிலத்தின் “ஸ்டைல்” நடிகருடன் ஒரு படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடனமாடி பல இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தார். அப்பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. அத்திரைப்படம் பேன் இந்தியா திரைப்படம் என்பதால் காஷ்மீர் முதல் குமரி வரை அனைவரும் அப்பாடலை யூட்யூப்பில் திரும்ப திரும்ப பார்த்து வெறி ஏத்திக் கொண்டிருந்தனர்.
இதற்கு முன்பை விட கவர்ச்சியில் எல்லை மீறி செயல்பட்டதால் ரசிகர்கள் பெரும் குஷியில் மூழ்கினார்கள். அதன் பின்பு அவர் தமிழில் “தூணிலும் துரும்பிலும்” இருக்கும் நடிகருடன் இரண்டாவது காதலியாக ஒரு திரைப்படத்தில் நடித்தார்.
அத்திரைப்படத்தில் கூட அவரிடம் உள்ளது கண்ணா? இல்ல கரண்ட்டா? என சந்தேகம் வந்தது போல் அவரின் மோகப் பார்வை பார்வையாளர்களை உசுப்பேத்தியது. அதிலும் கவர்ச்சியாக தோன்றி ரசிகர்களை கவுத்தி எடுத்தார்.
இந்நிலையில் “பக்கத்து” மாநிலத்தில் தற்போது அவர் நிறைய படங்களை கையில் வைத்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் ஹாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக பேச்சுக்கள் எழுகின்றன. மேலும் ஹிந்தி திரைப்பட உலகில் கொடிக்கட்டி பறக்க பிளான் போடுவதாக கூறப்படுகிறது. இதனால் கூடிய விரைவில் அவர் தென்னிந்திய சினிமாவிற்கு முழுக்கு போடப்போவதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றது.
