CINEMA
“என்னங்கடா PAN INDIA, மருதநாயகம் பாக்கிறியா?” .. கே ஜி எஃப்-ஐ வம்பிழுத்த சிம்பு?
“விக்ரம்” திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் சிம்பு கே ஜி எஃப் திரைப்படத்தை வம்பிழுத்துள்ளார்?
“விக்ரம் “ திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய சிம்பு “நான் எப்போதுமே ஆண்டவருக்கு நன்றி சொல்லுவேன், ஆனா ஆண்டவனே என் முன்னாடி தான் உட்கார்ந்திருக்கார்” என கூறியது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து பேசிய சிம்பு “இப்போலாம் ஏதோ பேன் இந்தியா, பேன் இந்தியா என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள், அந்த மருதநாயகம் ஒரு 5 நிமிஷம் போடுங்களேன் சார்” என்று கூறினார். அப்போது அரங்கமே அதிர்ந்தது.
சமீபத்தில் “RRR” “KGF2” என பல பேன் இந்தியா திரைப்படங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தமிழ் சினிமா வேஸ்ட் என்றும் ஆங்காங்கே பேச்சுகள் அடிபட்டு கொண்டே இருந்தது.
கமல்ஹாசன் இயக்கி நடித்த “மருத நாயகம்” பல வருடங்களுக்கு முன்பே பல கோடி ரூபாய் செலவில் படமாக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அத்திரைப்படம் பாதியிலேயே நின்று போனது. இப்போதும் “மருத நாயகம்” “எப்போது மீண்டும் தொடங்குவீர்கள்?” என்று ஆங்காங்கே கமல் ஹாசனிடம் ரசிகர்கள் கேட்ட வண்ணம் இறக்கின்றனர். ஆனால் மருத நாயகம் மீண்டும் தொடங்குவது குறித்தான எந்த தகவலையும் கமல் இது வரை வெளிவரவில்லை.
இந்நிலையில் சிம்பு “மருத நாயகம்” திரைப்படம் குறித்து “விக்ரம்” திரைப்பட விழாவில் பேசியது ரசிகர்களை குஷியாக்கியது. மேலும் “பத்தல பத்தல” பாடலுக்கு கமல் போலவே சிம்பு நடனமாடியது ரசிகர்களை மேலும் உற்சாகமாக்கியது.
