CINEMA
மணிரத்னம் பட நடிகையுடன் சிக்கிய சித்தார்த்…. ஓஹோ இதான் விஷயமா?
மணி ரத்னம் பட நடிகையுடன் சித்தார்த் டேட்டிங் செய்து வருவதாக ஒரு வீடியோ ஆதாரம் சிக்கியுள்ளது.
மணி ரத்னம் இயக்கிய “காற்று வெளியிடை” என்ற திரைப்படத்தில் நடித்தவர் அதிதி ராவ் ஹைதரி. இவர் மணி ரத்னம் இயக்கிய “செக்க சிவந்த வானம்”, மிஷ்கின் இயக்கிய “சைக்கோ” ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருப்பார். இவர் பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வருபவர். சமீபத்தில் கூட துல்கர் ஷல்மானுடன் “ஹே சினாமிகா” திரைப்படத்திலும் நடித்திருப்பார்.
நடிகர் சித்தார்த் கடந்த ஆண்டு “மஹா சமுத்திரம்” என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருந்தார். அதில் கதாநாயகியாக அதிதி ராவ் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தை தொடர்ந்து இருவரும் நெருங்கி பழகி வருவதாகவும் பல இடங்களுக்கு டேட்டிங் செல்வதாகவும் செய்திகள் வந்தன.
இந்நிலையில் தற்போது மும்பையில் ஒரு சலூனிற்கு வெளியே இருவரும் சேர்ந்து தென்பட்டுள்ளனர். அவர்களை பத்திரிக்கையாளர்கள் சுற்றி வளைத்தனர். இதனை பார்த்து கடுப்பாகி சித்தார்த் அவர்களிடம் கோபப்பட்டார். இருவரும் சேர்ந்து ஒரு காரில் ஏறிப்போகிறார்கள். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ “பிங்க் வில்லா” என்ற இணையத்தளம் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
View this post on Instagram
அதிதி ராவ் ஹைதரியும் நடிகர் சத்யதீப் மிஸ்ராவும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
அதே போல் சித்தார்த்தும் சமந்தாவும் சில ஆண்டுகளுக்கு முன் டேட்டிங் செய்து வந்தனர். இந்நிலையில் தற்போது அதிதி ராவும் சித்தார்த்தும் டேட்டிங் செய்து வருகின்றனர். இருவரும் சேர்ந்து தென்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
