Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

விநோதமான நோயால் அவதிப்படும் ஸ்ருதி ஹாசன்? அதிர்ச்சியில் திரை உலகம்

CINEMA

விநோதமான நோயால் அவதிப்படும் ஸ்ருதி ஹாசன்? அதிர்ச்சியில் திரை உலகம்

விநோதமான நோயால் தான் அவஸ்தைப்படுவதாக ஸ்ருதிஹாசன் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கமல் ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். இவர் சூர்யா நடிப்பில் வெளிவந்து மாஸ் ஹிட் ஆன “ஏழாம் அறிவு” திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன் பின் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவர் தனுஷுடன் நடித்த “3” திரைப்படம் 90’s kid-களின் ஃபேவரைட் திரைப்படங்களில் ஒன்றாகும். தனுஷும் ஸ்ருதி ஹாசனும் ரியல் காதலர்கள் போலவே திரைப்படத்தில் நடித்திருப்பார்கள். இப்போதும் இத்திரைப்படத்தின் பாடல்களை உருகி உருகி கேட்பவர்கள் பலர் இருக்கின்றனர்.

இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை பகிர்ந்து அதில் தனக்கு ஹார்மோன் சம்பந்தப்பட்ட சில குறைப்பாடுகள் இருப்பதாக பதிவிட்டிருந்தது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அவர் வெளியிட்டிருந்த பதிவில்..

“ PCOS மற்றும் என்டோமெட்ரியோசிஸ் என்ற ஹார்மோன் குறைப்பாட்டை நான் எதிர்கொண்டு வருகிறேன். வளர்சிதை மாற்றம், சமநிலையற்றல் ஆகிய குறைப்பாடுடன் போராடுவது எவ்வளவு சிரமம் என்பது பெண்களுக்கு தெரியும். நான் இதனை பார்த்துக் கொண்டு சும்மா இல்லாமல் இதனுடன் போராட முடிவு செய்தேன்.

சரியான உணவு முறையாலும், உடற்பயிற்சியாலும், நல்ல தூக்கத்தாலும் இதனை எதிர்கொண்டு நலமாக என் உடலை பார்த்துக் கொண்டு வருகிறேன். எனது உடல் பெர்ஃபக்ட் இல்லை என்றாலும் என்னுடைய மனம் ஃபிட்டாகவே இருக்கிறது” என பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

PCOS என்பது பெண்களின் கருவில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிக்குமாம். இதனால் பெண்களுக்கு மாதவிடாய் தாமதம் ஆகும் பிரச்சனைகள் வருமாம். இதனால் கர்ப்பம் அடைவதில் சிக்கல் ஏற்படுவதுடன், உடல் எடை அதிகரித்தல் ஆகிய பிரச்சனைகளுக்கு இட்டுச்செல்லுமாம்.

அதே போல் என்டோமெட்ரியோசிஸ் என்பது கருப்பையில் தேவையில்லாமல் வளரும் திசுக்களை குறிப்பதாம். இதிலும் மாதவிடாய் குறித்த பிரச்சனைகள் தென்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top