CINEMA
“படமும் கிடையாது.. Refund-ம் கிடையாது”.. ரசிகர்களை கடுப்பேற்றிய திரையரங்கு நிர்வாகம்
சென்னையில் பிரபல திரையரங்கு ஒன்றில் நேற்று வெளியான திரைப்படத்திற்குச் சென்ற ரசிகர்களை பல மணி நேரம் காக்க வைத்த பின் ஷோவை கேன்சல் செய்துள்ளனர்.
பா ரஞ்சித் இயக்கத்தில் நேற்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “நட்சத்திரம் நகர்கிறது”. இத்திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துசாரா விஜயன், கலையரசன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஜாதி, மதம், பாலினம் தாண்டிய காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் சமூகத்திடம் ஒரு உரையாடலை நடத்தியுள்ளதாக விமர்சனர்கள் தெரிவிக்கின்றனர்.
பாண்டிச்சேரியில் ஒரு நாடக குழுவில் இருக்கும் துசாரா விஜயனும் காளிதாஸ் ஜெயராம் காதலித்து வரும் நிலையில் ஜாதி குறித்த வாக்குவாதத்தில் இருவரும் பிரிகிறார்கள். அந்த நாடக குழுவில் ஓரின காதலர்கள் இருக்கிறார்கள். ஒரு ஆணை திருமணம் செய்துகொண்ட திருநங்ககையும் இருக்கிறார்.
இந்த நிலையில் தான் சினிமாவில் பெரிய ஹீரோ ஆக வேண்டும் என்ற கனவில் கலையரசன் அந்த நாடக குழுவில் வந்து சேர்கிறார். அவருக்கும் அந்த குழுவில் இருக்கும் மற்றவர்களுக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.
இதனை தொடர்ந்து ஜாதி ஆணவ கொலைகள் பற்றிய ஒரு நாடகத்தை அரங்கேற்ற வேண்டும் என அவர்கள் யோசிக்கும் போது அவர்களுக்குள் பல பிரச்சனைகள் வருகிறது. இந்த பிரச்சனைகளை எல்லாம் தாண்டி அந்த நாடகம் அரங்கேறியதா? இல்லையா? என்பதே “நட்சத்திரம் நகர்கிறது” திரைப்படத்தின் கதைச் சுருக்கம்.
இப்படிப்பட்ட Bold ஆன கதையம்சத்துடன் வெளியாகியுள்ளது இத்திரைப்படம். இந்த நிலையில் நேற்று சென்னையின் பிரபல திரையரங்கு ஒன்றில் “நட்சத்திரம் நகர்கிறது” திரைப்படத்தின் முதல் காட்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களை கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்கு மேல் காக்கவைத்த பின் ஷோ கேன்சல் செய்யப்படுகிறது என கூறியிருக்கிறார்கள். மேலும் Refund கேட்டபோது அது குறித்து நிர்வாகம் எந்த பதிலும் அளிக்கவில்லை என தெரியவருகிறது. இதனால் திரையரங்கு நிர்வாகத்துடன் பார்வையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக படத்தை திரையிட முடியவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.
#NatchathiramNagargiradhu FDFS 09:20am show cancelled in PVR VR Mall chennai, this is not the way a theatre like pvr runs. Pure disaster. Waste of time fuel parking charges. Why such things still happen pic.twitter.com/Et3B9JGYnc
— THE SEVEN (ஏழு) (@iam7eazhu) August 31, 2022