GALLERY
“துள்ளுவதோ ஷெரின்” வொர்க் அவுட் என்ற பெயரில் காட்டு காட்டு என காட்டும் ஹாட் புகைப்படங்கள்..
நடிகை ஷெரின் காட்டு காட்டென காட்டிய வொர்க் அவுட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகை ஷெரின் “போலீஸ் டாக்” என்ற திரைப்படத்தின் மூலம் கன்னடத்தில் அறிமுகமானார். எனினும் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த “துள்ளுவதோ இளமை” என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகினார். அது மட்டும் அல்லாமல் முதல் திரைப்படத்திலேயே இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டும் போனார்.
அதன் பின் தமிழில் “ஜெயா”, “ஸ்டூடண்ட் நம்பர் 1”, “விசில்”, “கோவில்பட்டி வீரலட்சுமி”, “உற்சாகம்”, “பூவா தலையா”, “நண்பேண்டா” போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
இதனிடையே “பீமா” திரைப்படத்தில் இடம்பெற்ற “ரங்கு ரங்கம்மா” பாடலில் கிளுகிளுப்பாக தோன்றி இளசுகளின் மனசை திணற வைத்தார். “விசில்” திரைப்படத்தில் இடம்பெற்ற “அழகிய அசுரா” என்ற பாடலில் இவர் ஆடிய ஆட்டம் இப்போது வரையும் 90’s kid-களின் தூக்கத்தை கெடுத்து வருகிறது.
மேலும் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வந்தார். அதனை தொடர்ந்து “பிக் பாஸ்” சீசன் 3 நிகழ்ச்சியில் கண்டஸ்டன்டாக வந்து ரசிகர்களுக்கு தரிசனம் தந்தார். அதன் பின் “டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்” என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.
இதனிடையே தனது இன்ஸ்டா பக்கத்தில் கண்களை கவரும் விதமாக பல புகைப்படங்களை இறக்கி இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்து வந்தவர், சமீபத்தில் ஒர்க் அவுட் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இப்போதும் ஷெரின் “துள்ளுவதோ இளமை”யில் பார்த்த ஷெரின் போல் இளமை துள்ளலோடு வலம் வருகிறார். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி பலர் கண்களை கொள்ளை கொண்டு வருகிறது.