TELEVISION
ஷகீலா ஓட தங்கச்சி விஜய் கூட நடிச்சிருக்காங்களா??
நடிகை ஷகீலாவின் தங்கை விஜய்யுடன் இணைந்து ஒரு பாடலில் நடனம் ஆடி இருக்கிறார் என நேற்று குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஷகீலா கூறியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “குக் வித் கோமாளி” சீசன் 3 நிகழ்ச்சியில் இந்த வாரம் celebration week என்பதால் முந்தைய சீசனில் பங்கேற்ற குக்குகள் இந்த வாரம் கலந்து கொண்டனர்.
அதாவது “குக் வித் கோமாளி” சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கு கொண்ட கனி, ஷகீலா, தமிழ் ரித்விகா, தீபா, பவித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர். அதே போல் கோமாளிகளில் பாலா, சிவாங்கி, சரத், சக்தி, புகழ், தங்கதுரை, சீத்தல், சுனிதா, அதிர்ச்சி அருண், குரேஷி ஆகியோர் பங்கேற்றனர்.
மணிமேகலை சில காரணங்களால் இந்த வாரம் வரவில்லை. இந்நிலையில் நிகழ்ச்சியில் சீத்தலை பார்த்த ஷகிலா “நீ சீத்தல், கரெக்ட்டா? என கேட்டுவிட்டு “என்னுடைய தங்கையின் பெயரும் சீத்தல் தான். அவள் விஜய்யுடன் “ஓ ப்யாரி பானி பூரி” என்ற பாடலில் நடனம் ஆடியிருக்கிறாள். ஆனால் அவள் 23 வயதிலேயே இறந்து விட்டாள்” என சோகத்தோடு கூறினார்.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் ஷகீலா தனது தங்கையை குறித்து பேசியிருக்கிறார். இந்நிலையில் நேற்று ஷகீலா “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் தனது தங்கை இந்த பாடலில் விஜய்யுடன் நடனம் ஆடி இருக்கிறார் என கூறிய பிறகு யூட்யூப்பில் பலரும் அந்த பாடலை தேடிப் பார்த்து வருகின்றனர்.
“ஓ ப்யாரி பானி பூரி” பாடல் 1996 ஆம் ஆண்டு வெளியான “பூவே உனக்காக” திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஆகும். அப்பாடல் வேற லெவல் ஹிட் ஆன பாடல். இப்பாடலில் விஜய்யுடன் ஷகீலாவின் தங்கை நடனமாடியுள்ளார்.