Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

நயன்தாரா திருமணத்தில் ஸ்டைலாக தோன்றிய ஷாருக் கான்.. வைரல் புகைப்படங்கள்

CINEMA

நயன்தாரா திருமணத்தில் ஸ்டைலாக தோன்றிய ஷாருக் கான்.. வைரல் புகைப்படங்கள்

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தில் ஷாருக் கான் ஸ்டைலாக தோன்றியுள்ளார்.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் தற்போது மகாபலிபுரம் ரிசார்டில் நடைபெற்று வருகிற நிலையில் ஏ. ஆர். ரகுமான், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர் . சில நிமிடங்களுக்கு முன் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

இந்நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வில் ஸ்டைலாக கெத்தாக தோன்றிய ஷாருக் கானின் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. இப்புகைப்படங்களை ஷாருக் கானின் மேனேஜர் பூஜா தத்லானி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

அதே போல் தயாரிப்பாளர் ஐசரி கணேசன், இயக்குனர் மோகன் ராஜா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இத்திருமணத்தில் 200 பேர்கள் வரை மட்டுமே அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. கலந்து கொள்பவர்கள் செல்ஃபோன்களை உள்ளே எடுத்துச் செல்ல கூடாது என தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் இத்திருமண விழாவின் வீடியோ உரிமம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஆகியோர் கடந்த 6 வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்கள் Live in உறவில் இருந்த போது இருவரும் இணைந்து பல நாடுகளுக்கு Dating சென்று வந்தனர்.

இதனை தொடர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக சென்ற வருடம் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். அதன் மூலம் இவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்பது தெரியவந்தது. ஆனால் அதன் பின்பும் இருவரும் திருமணம் குறித்து மௌனம் சாதித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த மாதம் சர்ப்ரைஸ் செய்தி ஒன்றை கூறினார்கள். அதாவது ஜூன் மாதம் 9 ஆம் தேதி இருவரும் இரு வீட்டார் சம்மதத்தோடு திருமணம் செய்து கொள்ளப் போவதாக தெரிவித்தனர். திருப்பதியில் திருமணம் நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளிவந்தது.

ஆனால் அதன் பின் திருமணம் நடைபெறும் இடத்தை மகாபலிபுரம் ரிசார்ட்டிற்கு மாற்றினார்கள். இந்நிலையில் இன்று அந்த ரிசார்ட்டில் இருவருக்கும் திருமணம் நடைபெற்று வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top