CINEMA
செல்வராகவன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அப்டேட்; அசுரத்தனமான போஸ்டர்..
செல்வராகவன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அசுரத்தனமான போஸ்டர் வெளியாகியுள்ளது.
இயக்குனர் செல்வராகவன் “காதல் கொண்டேன்”, “7ஜி ரெயின்போ காலனி”, “ஆயிரத்தில் ஒருவன்” “மயக்கம் என்ன” “இரண்டாம் உலகம்” போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். தமிழ் திரையுலகில் தனித்துவமான இயக்குனராக திகழ்பவர்.
இவர் இயக்கிய “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படம் வெளிவந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகியும் இன்றும் இத்திரைப்படம் குறித்து பேசப்பட்டுத் தான் வருகிறது. சில மாதங்களுக்கு முன் “ஆயிரத்தில் ஒருவன்” பாகம் 2 தயாராகி வருவதாக தகவல் வெளிவந்தது. மேலும் ஒரு அறிவிப்பு போஸ்டரும் வெளிவந்தது. தனுஷ் அத்திரைப்படத்தில் நடிப்பதாகவும் அறிவிப்பு வந்தது.
செல்வராகவன் சமீபத்தில் விஜய் நடித்த “பீஸ்ட்”, “சாணி காயிதம்”, போன்ற திரைப்படங்களில் சிறப்பாக நடித்திருந்தார். இதனை தொடர்ந்து “பழைய வண்ணாரப்பேட்டை”, “திரௌபதி”, “ருத்ர தாண்டவம்” ஆகிய திரைப்படங்களை இயக்கிய மோகன் ஜீயுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வந்தது.
இதனை தொடர்ந்து தற்போது இத்திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் ஒன்று வெளிவந்துள்ளது. இத்திரைப்படத்திற்கு “பகாசூரன்” என்று பெயரிட்டுள்ளனர். போஸ்டரில் மஹாபாரதம் புத்தகம் நடுவில் இருக்க, அதன் அருகில் ஒரு மொபைல் ஃபோன் திருப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் அருகில் ஒரு Ear Pad-ம் இருக்கிறது.
மின்சாரம் எதுவும் இல்லாமல் விளக்கு எரிகிறது. இதன் மூலம் நவீனத்தை மூடிவைத்துவிட்டு புராண காலத்திற்கு பயணிப்பது போன்ற குறியீடோ என வியூகிக்க முடிகிறது. மேலும் டைட்டிலும் “பகாசூரன்” என்று இருப்பதால் இது ஒரு Mythological thriller ஆக இருக்குமோ என்ற சந்தேகமும் வருகிறது.
இத்திரைப்படத்தில் செல்வராகவனுடன் நட்டி (எ) நடராஜ் நடிக்கிறார். சாம் சி எஸ் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈசன் அருள் 🙏🙏..
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்…#Bakasuran #பகாசூரன் Title look.. Shooting in progress now.. In Theaters 2022.. @selvaraghavan@natty_nataraj @SamCSmusic @ProBhuvan @Gmfilmcorporat1 pic.twitter.com/gKjYxXniEm— Mohan G Kshatriyan (@mohandreamer) May 29, 2022