CINEMA
சர்ச்சையாகும் “சாவார்க்கர்” திரைப்படத்தின் போஸ்டர்; இணையத்தில் கொந்தளிப்பு
சாவார்க்கரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தின் போஸ்டர் இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்தியாவின் இந்துத்துவா கொள்கையின் ஊற்றாக விளங்கியவர் சாவார்க்கர். இவர் இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர் என அறியப்படுகிறார். பிரிட்டுஷ் அரசுக்கு எதிராக போராடியதால் இவரை பிரிட்டிஷ் அரசு கைது செய்து அந்தமான் சிறையில் தள்ளியது.
அங்கிருந்து மன்னிப்பு கடிதங்கள் எழுதி அந்தமான் சிறையில் இருந்து வெளிவந்ததாக சில வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் காந்தி கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பின் விடுதலை பெற்றதாகவும் வரலாறு உண்டு.
இந்நிலையில் சாவார்க்கர் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் ஒன்று பாலிவுட்டில் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்திற்கு “ஸ்வதந்திர வீர் சாவார்க்கர்” என பெயரிட்டுள்ளனர்.
இன்று இத்திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. பாலிவுட்டின் முன்னணி நடிகர் ரன்தீப் ஹூடா இத்திரைப்படத்தில் சாவார்க்கர் வேடத்தில் நடிக்கிறார்.
இன்று இத்திரைப்படத்தின் போஸ்டர் வெளியான நிலையில் “வெள்ளையர்களிடம் மன்னிப்பு கேட்டவர் சுதந்திர போராட்ட வீரரா?” என்றும் “காந்தி கொலையில் ஈடுபட்டவரை புகழ்ந்து திரைப்படம் எடுப்பதா?” என்றும் இணையத்தில் பலர் பேசி வருகின்றனர். இதனால் தற்போது பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
எனினும் “சாவார்க்கர் மீது தேவையில்லாத அவதூறுகளை பலர் கிளப்பி வருகின்றனர். ஆனால் அவர் ஒரு சிறந்த தேசியவாதி, சுதந்திர போராட்ட வீரர்” என ஒரு பக்கம் பலரும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
இன்று சாவார்க்கரின் 139 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சாவார்க்கரின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தின் போஸ்டர் வெளிவந்துள்ளது. சாவார்க்கராக நடிக்கும் ரன்தீப் ஹீடா தனது டிவிட்டார் பக்கத்தில் இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவின் பேசப்படாத ஹீரோ சாவார்க்கராக நடித்துள்ளதில் பெருமை கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
A salute to one of the tallest unsung heroes of India’s struggle for freedom & self-actualisation. hope I can live up to the challenge of filling such big shoes of a true revolutionary & tell his real story which had been brushed under the carpet for so long#VeerSavarkarJayanti pic.twitter.com/EaiDWQyeLZ
— Randeep Hooda (@RandeepHooda) May 28, 2022