CINEMA
மீண்டும் சந்தானத்தோடு இணைந்த உதயநிதி.. “குளு குளு” ன்னு வெளியான போஸ்டர்
சந்தானத்தோடு மீண்டும் உதயநிதி ஸ்டாலின் இணையும் புதிய திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளிவந்துள்ளது.
தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக அறிமுகமாகிய திரைப்படம் “ஒரு கல் ஒரு கண்ணாடி”. அத்திரைப்படத்தின் பெரிய வெற்றியாக திகழ்ந்தது உதயநிதி-சந்தானம் காம்போ.
இருவரும் சேர்ந்து நகைச்சுவையில் கலக்கி எடுத்திருப்பார்கள். குறிப்பாக கிளைமேக்ஸில் ஹன்சிகா திருமணத்திற்குச் சென்று பேசும் வசனங்கள் ஆகட்டும், அதற்கு முன் விமானத்தில் ஹன்சிகாவை கலாய்ப்பதாகட்டும், சந்தானத்தின் காதலியை உதயநிதி ஸ்டாலின் பங்கமாய் கலாய்ப்பதாகட்டும், படம் முழுவதுமே இவர்களின் காம்போ செமத்தியாக ஒர்க் அவுட் ஆகியிருக்கும்.
அதன் பின் இதே உதயநிதி ஸ்டாலின்-சந்தானம் காம்போவில் “நண்பேன்டா”, “கதிர்வேலன் காதல்” ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின்-சந்தானம் காம்போ மீண்டும் இணைந்துள்ளது. ஆம்!
அதாவது சந்தானம் நடித்த “குளு குளு” என்ற திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயிண்ட் மூவீஸ் சார்பாக வெளியிட உள்ளார். இது குறித்த அறிவிப்பு போஸ்டர் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.
“குளு குளு” திரைப்படத்தை ரத்ன குமார் இயக்கி உள்ளார். இவர் இதற்கு முன் “மேயாத மான்”, “ஆடை” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர். மேலும் “மாஸ்டர்”, “விக்ரம்” ஆகிய திரைப்படங்களுக்கு வசனங்களும் எழுதியுள்ளார்.
#GuluGulufromJuly29 pic.twitter.com/0o8mvmFGRj
— Udhay (@Udhaystalin) July 12, 2022
சந்தானம் தற்போது கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் “பாரீஸ் ஜெயராஜ்”, “டிக்கிலோனா” “சபாபதி” ஆகிய திரைப்படங்கள் வெளியானது. அதன் பின் “ஏஜெண்ட் கண்ணாயிரம்” என்ற திரைப்படம் வெளிவர உள்ளது. தற்போது “குளு குளு” திரைப்படத்தின் போஸ்டர் வெளிவந்துள்ளது.
“குளு குளு” திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.
