CINEMA
“குஷி” ஆக இருக்கும் சமந்தா-விஜய் தேவரகொண்டா.. வைரல் வீடியோ..
சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவும் இடம்பெற்ற புதிய “குஷி” வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமந்தா தமிழ், தெலுங்கு என பல திரைப்படங்களில் பிசியாக இருக்கிறார். அதே போல் விஜய் தேவரகொண்டாவும் தெலுங்கில் பிசியான ஆள்.
இந்நிலையில் இருவரும் சேர்ந்து “குஷீ” என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவும் காஷ்மீரின் பனியில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து “குஷீ” திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது. அந்த வீடியோவில் கல்யாண கெட் அப்பில் இருவரின் ஆடைகளையும் முடிச்சி போட்டபடி தென் படுகிறார் சமந்தா. விஜய் தேவரகொண்டா வாயில் சிகரெட்டுடன் மாஸாக இருக்கிறார். சமந்தா க்யூட்டாக அவரை பார்த்து சிரித்தவாறு இருக்கிறார்.
“குஷீ” திரைப்படம் வருகிற கிறுஸ்துமஸை ஒட்டி டிசம்பர் 23 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இத்திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது.
சமீபத்தில் வெளியான “காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் கதீஜாவாக வந்து நமது மனதை கொள்ளையடித்து போனார் சமந்தா. இந்நிலையில் தற்போது “குஷீ” ஆக வந்து கொள்ளையடிக்க தயாராக இருக்கிறார்.
சமந்தா என்ற பெயரை கேட்டாலே இளசுகளின் மனசில் பட்டாம் பூச்சி பறக்கும். இப்போதும் எப்போதும் தனது உடலை கச்சிதமாக சிலை போல் செதுக்கி வருகிறார் சமந்தா.
அதே போல் “குஷீ” திரைப்படத்திலும் க்யூட்டாக வந்து இளைஞர்களின் மனதை கொள்ளையடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
View this post on Instagram