Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

பாலிவுட்டில் பட்டறையை போடும் சமந்தா? இவர் தான் ஹீரோ?

CINEMA

பாலிவுட்டில் பட்டறையை போடும் சமந்தா? இவர் தான் ஹீரோ?

சமந்தா பாலிவுட்டில் ஒரு புதிய படத்தில் அறிமுகமாக உள்ளார். யாருடன் ஜோடி சேரப்போகிறார் தெரியுமா?

சமந்தா தற்போது “யசோதா”, “சகுந்தலா”, “குஷி” ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் “குஷி” திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.

“குஷி” திரைப்படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக விஜய் தேவரகொண்டா நடித்திருக்கிறார். இத்திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளிவர உள்ளது.

இந்நிலையில் சமந்தா பாலிவுட்டில் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். அத்திரைப்படத்தை தினேஷ் விஜன் இயக்க உள்ளார். மேலும் சமந்தாவுடன் ஜோடி சேரப்போகும் அந்த முன்னணி நடிகர் குறித்த தகவலும் வெளிவந்துள்ளது.

அதாவது சமந்தா அறிமுகமாகும் பாலிவுட் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா நடிக்க உள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆயுஷ்மான் குர்ரானா, “பதாய் ஹோ”, “ஆர்டிக்கள் 15”, ஆகிய பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்டில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக திகழ்கிறவர் ஆயுஷ்மான். இவர் திரைப்படங்கள் அனைத்தும் வித்தியாசமான கதைக்களமாக அமைந்திருக்கும்.

இவர் ஓரின காதலராக நடித்த “சுப மங்கல் ஸ்யாதா சாவதான்” திரைப்படம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. மேலும் அத்திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அதே போல் ஆயுஷ்மான் குர்ரானா நடித்த “ஆர்ட்டிக்கள் 15” திரைப்படம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. இவர் நடித்த சில திரைப்படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

“ஆர்ட்டிகிள் 15” திரைப்படத்தை தமிழில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் “நெஞ்சுக்கு நீதி” திரைப்படமாக ரீமேக் செய்யப்பட்டது. அதே போல் இவர் நடித்த “பதாய் ஹோ” திரைப்படம் தமிழில் ஆர் ஜே பாலாஜி நடிப்பில் “வீட்ல விசேஷம்” திரைப்படமாக ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“புஷ்பா” திரைப்படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியதில் இந்தியாவே சமந்தாவை அறிந்து கொண்டது. ஏற்கனவே தென் இந்திய சினிமா மார்க்கெட்டை கைப்பற்றிய சமந்தா தற்போது பாலிவுட்டிலும் தன் கொடியை ஏற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in CINEMA

To Top