CINEMA
விஜய்க்கு வில்லி சமந்தாவா?? என்னப்பா சொல்றீங்க??
விஜய் படத்தில் சமந்தா வில்லியாக நடிக்கப் போவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் பிரகாஷ் ராஜ், சரத் குமார், பிரபு, குஷ்பு, யோகி பாபு, ஷாம் ஆகிய பலரும் நடித்து வருகின்றனர்.
“வாரிசு” திரைப்படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார். தமன் இசையமைத்து வருகிறார். “வாரிசு” திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவருகிறது. தெலுங்கில் “வாரசடு” என்ற பெயரில் வெளிவருகிறது.
“வாரிசு” திரைப்படம் முழுக்க முழுக்க Family entertainer ஆக உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.
“வாரிசு” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். “வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடனே இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இத்திரைப்படத்தில் விஜய் படம் முழுக்க நெகட்டிவ் ரோலில் வருவதாகவும் செய்திகள் தெரிவித்தன. இந்நிலையில் இத்திரைப்படம் குறித்த சுவாரசியமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
அதாவது இத்திரைப்படத்தில் சமந்தா வில்லியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு நேர் மாறாக இன்னொரு தகவலும் பரவி வருகிறது. அதாவது சமந்தா விஜய்க்கு வில்லியாக இல்லை, கதாநாயகியாக தான் நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது. எனினும் சமந்தா இத்திரைப்படத்தில் நடிக்க இருப்பது உறுதி எனவும் கூறப்படுகிறது.
சமந்தா தற்போது “குஷி” என்ற திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்துள்ளார். மேலும் “சகுந்தலா”, “யசோதா” ஆகிய திரைப்படங்கள் வெளிவர தயாராக உள்ளன. விஜய்-சமந்தா ஜோடி இதற்கு முன் “தெறி”, “மெர்சல்” ஆகிய திரைப்படங்களில் தோன்றியுள்ளனர்.
