Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

மீண்டும் வைரல் ஆகும் சமந்தாவின் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு ரேங்க் கார்ட்…??

CINEMA

மீண்டும் வைரல் ஆகும் சமந்தாவின் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு ரேங்க் கார்ட்…??

சமந்தாவின் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு ரேங்க் கார்ட் புகைப்படங்கள் தற்போது மீண்டும் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

நடிகை சமந்தா சென்னையை பூர்வீகமாக கொண்டவர். இவர் தனது பள்ளி, கல்லூரி நாட்களை சென்னையிலேயே கழித்தார். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரது 10 மற்றும் 11 ஆம் வகுப்பு ரேங்க் கார்ட் புகைப்படங்கள் வைரல் ஆகின.

அதை பார்த்த போது சமந்தா சென்னையின் பிரபலமான பள்ளிகளில் படித்துள்ளார் என்பது தெரிய வந்தது. அதில் பத்தாம் வகுப்பு அரை ஆண்டு தேர்வில் முதல் ரேங்க் வாங்கியுள்ள்ளார் சமந்தா. மேலும் அந்த ரேங்க் கார்டில் பள்ளி ஆசிரியர் “சமந்தா இப்பள்ளியின் சொத்து” என கூறியது குறிப்பிடத்தக்கது.

அதே போல் சமந்தாவின் பதினொன்றாம் வகுப்பு ரேங்க் கார்டிலும் சிறப்பாக படித்துள்ளதாக ஆசிரியர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

தற்போது இப்புகைப்படங்கள் மீண்டும் வைரல் ஆகி வருகின்றது.

 

தென்னிந்தியாவின் டாப் நடிகையாக வலம் வரும் சமந்தாவிற்கு “யசோதா”, “சகுந்தலா” ஆகிய திரைப்படங்கள் வெளிவர தயாராக இருக்கின்றது. மேலும் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து “குஷி” என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இத்திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகிறது.

சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கின் முன்னணி நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.

“புஷ்பா” திரைப்படத்தில் சமந்தா ஐட்டம் டான்ஸ் ஆடிய “ஓ சொல்றியா” பாடல் மிகவும் பிரபலமடைந்தது. சமந்தா நன்றாகவே கிளாமரை தூக்கி காட்டினார். அதன் பின் சமந்தா இந்திய நடிகையாக ஆகிப்போனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in CINEMA

To Top