CINEMA
சல்மான் கானுடன் இணையும் தென்னிந்திய அழகிகள்?? யார் யார் தெரியுமா?
சல்மான் கானுடன் பாலிவுட் திரைப்படத்தில் இணையவுள்ள தென்னிந்திய நடிகைகள் யார் யார் தெரியுமா?
பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கான் “டைகர் 3” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை தொடர்ந்து “நோ என்ட்ரி 2” திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தெரிகிறது.
இத்திரைப்படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் அனில் கபூர் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தற்போது “நோ என்ட்ரி 2” திரைப்படத்தின் கதாநாயகிகள் குறித்த ஒரு சுவாரசியமான செய்தி வந்துள்ளது.
அதாவது இத்திரைப்படத்தில் நான்கு தென் இந்திய கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக தெரிய வருகிறது. சமந்தா, ராஷ்மிகா மந்தனா, தமன்னா, பூஜா ஹெக்டே ஆகியோர் சல்மான் கானுடன் நடிக்க உள்ளனராம்.
சமந்தா இதற்கு முன் “ஏக் தீவானா தா” என்ற பாலிவுட் திரைப்படத்தில் கேமியோ ரோல் செய்திருப்பார். இத்திரைப்படம் தமிழில் வெளிவந்த “விண்ணை தாண்டி வருவாயா” திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.
ராஷ்மிகா மந்தனா “மிஷன் மஜ்னு” “குட் பாய்” ஆகிய ஹிந்தி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இத்திரைப்படங்கள் தற்போது வெளிவர காத்திருக்கின்றன. தற்போது அவர் “அனிமல்” என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் நடித்த “புஷ்பா” திரைப்படமும் ஹிந்தியில் மாஸ் ஹிட் ஆனது.
பூஜா ஹெக்டே ஹிந்தியில் “மொகஞ்சதாரோ”, “ஹவுஸ் ஃபுல் 4”, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் ஹிந்தியில் “சர்க்கஸ்”, கபி ஈடு கபி தீவாளி” ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த “ராதே ஷ்யாம்” ஹிந்தியிலும் வெளியானது. தமன்னாவை பொருத்தவரை ஹிந்தியில் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
சல்மான் கான் இதற்கு முன் நடித்த “ராதே” திரைப்படத்தில் மேகா ஆகாஷ், பரத் ஆகியோர் நடித்திருப்பர். இத்திரைப்படத்தை பிரபு தேவா இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
