CINEMA
“டப்பிங்கில் பிச்சு உதறும் சாய் பல்லவி” கார்கி படத்தின் புது Glimpse!
சாய் பல்லவி நடிப்பில் உருவாகும் கார்கி திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளிவந்துள்ளது.
பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக வந்து நம் உள்ளங்களை கொள்ளை கொண்டவர் சாய் பல்லவி. இவர் மலையாளம், தெலுங்கு, தமிழ் என பல மொழி திரைப்படங்களில் பிசியாக வலம் வருகிறார்.
சாய் பல்லவி அசுரத்தனமாக நடனமாடுபவர். பிரேமம் திரைப்படத்தில் யாரும் எதிர்பார்க்காத விதமாக அவர் ஆடிய நடனத்தை நாம் மறக்கமுடியாது. மேலும் “ரவுடி பேபி” பாடலில் அவர் ஆடிய நடனம் சூறாவளி போல் இருந்தது.
இந்நிலையில் “கார்கி” என்ற திரைப்படத்தில் சமீபகாலமாக நடித்து வருகிறார். அத்திரைப்படம் தமிழ். தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது. இத்திரைப்படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். “96”திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் தற்போது வெளிவந்துள்ளது. அதில் சாய் பல்லவி தான் படத்தின் முக்கிய கதாநாயகியாக திகழ்கிறார். அதாவது ஒரு பெண்ணை மையப்படுத்தி எழுதப்பட்ட திரைக்கதையாக தெரிகிறது. இதில் சாய் பல்லவி ஹோம்லி லுக்கில் அழகாக காட்சி தருகிறார். திரைக்கதை பல திருப்பங்களுடன் விறுவிறுப்பான காட்சிகளால் இடம்பெற்றிருக்கும் என நினைக்க வைக்கிறது.
திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் வெளியாகிறது. கிளிம்ப்ஸில் சாய் பல்லவி மூன்று மொழிகளில் சொந்த குரலிலேயே பேசுகிறார். அவரை பிற மொழிகளின் வசனங்களை உச்சரிக்க வைக்க அத்திரைப்படத்தின் இயக்குனர் வழி காட்டுகிறார். எனினும் அவருக்கு அது சரளமாக வந்துவிடுகிறது. இவ்வாறு அந்த கிளிம்ப்ஸ் அமைந்திருக்கிறது.
மேலும் இத்திரைப்படத்தின் டீசர் விரைவில் வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சாய் பல்லவி நடிப்பில் “விராட பருவம்” ஜூலை மாதம் திரைக்கு வர தயாராகவுள்ளது. இந்நிலையில் “கார்கி” திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
