CINEMA
பிறந்தநாளில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்த சாய் பல்லவி..
நடிகை சாய் பல்லவி பிறந்தநாளான இன்று ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்துள்ளார். என்ன தெரியுமா?
பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக வந்து நம் உள்ளங்களை கொள்ளை கொண்டவர் சாய் பல்லவி. இவர் மலையாளம், தெலுங்கு, தமிழ் என பல மொழி திரைப்படங்களில் பிசியாக வலம் வருகிறார்.
சாய் பல்லவி அசுரத்தனமாக நடனமாடுபவர். பிரேமம் திரைப்படத்தில் யாரும் எதிர்பார்க்காத விதமாக அவர் ஆடிய நடனத்தை நாம் மறக்கமுடியாது. மேலும் “ரவுடி பேபி” பாடலில் அவர் ஆடிய நடனம் சூறாவளி போல் இருந்தது.
இதனை தொடர்ந்து “கார்கி” என்ற திரைப்படத்தில் சமீபகாலமாக நடித்து வருகிறார். அத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது. இத்திரைப்பட
த்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். “96”திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் சாய் பல்லவியின் பிறந்த நாளான இன்று இத்திரைப்படத்தின் திரைப்படத்தின் சில மாதங்களுக்கு முன்பு ராணா நடிப்பில் உருவான “விராட பருவம்” திரைப்படத்தின் டிரைலர் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து சாய் பல்லவி பிறந்த நாளான இன்று “சோல் ஆஃப் வெண்ணிலா” என்ற பாடல் வெளியாகியுள்ளது.
இன்று “கார்கி” திரைப்படத்தின் கிளிம்ப்ஸூம் வெளியான நிலையில் சாய் பல்லவி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தந்துள்ளார். “விராட பருவம்” திரைப்படத்தில் ராணா ஹீரோவாக வருகிறார். சாய் பல்லவி கதாநாயகியாக வருகிறார். இவர்களுடன் நந்திதா தாஸ், நிவேதா பெத்துராஜ், பிரியாமணி, நவீன் சந்திரா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் வருகிறார்கள். இத்திரைப்படத்தை வேணு உடுகுலா இயக்கியுள்ளார். சுரேஷ் போபிலி இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் ஜூலை 1 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
