REVIEW
சாய் பல்லவியின் கார்கி திரைப்படம் எப்படி இருக்கு.? ஆடியன்ஸ் என்ன சொல்றாங்க பாக்கலாம்.
சாய் பல்லவி நடிப்பில் உருவான “கார்கி” திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் ஆடியன்ஸ் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.
சாய் பல்லவி நடித்த “கார்கி” திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கி உள்ளார். “96”திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
“கார்கி” திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளிவந்துள்ளது. “கார்கி” திரைப்படத்தை 2D என்டர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா மற்றும் கோதிகா ஆகியோர் தயாரித்துள்ளனர்.
“கார்கி” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வருடத்தின் சிறந்த திரைப்படம் என்றேல்லாம் போற்றப்படுகிறது. தற்போது “கார்கி” திரைப்படம் குறித்து டிவிட்டரில் படம் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்க்கலாம்.
ஒருவர் “கார்கி” திரைப்படம் தமிழில் இதுவரை வந்த படங்களை விட சிறந்த படம் என கூறியுள்ளார். மேலும் “திரைக்கதை, இயக்கம், நடிப்பு எல்லாம் அருமையாக அமைந்திருக்கிறது” என கூறியுள்ளார்.
விமர்சகர் ரமேஷ் பாலா “கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்” என கூறியுள்ளார்.
மற்றொரு ரசிகர் “கார்கி திரைப்படத்தில் நடிகர்கள், பின்னணி இசை, நீதிமன்ற காட்சிகள், கதை மற்றும் திரைக்கதை, ஒளிப்பதிவு இது எல்லாமே பிளஸ்கள். மைனஸ் எதுவும் இல்லை” என கூறியிருக்கிறார்.
மற்றொரு ரசிகர் “கார்கி வின்னர்” என புகழ்ந்துள்ளார்.
மற்றொரு ரசிகர் “கார்கி சொல்லப்பட வேண்டிய கதை. நிச்சயம் தேசிய விருது உண்டு” என கூறியுள்ளார்.
மற்றொரு ரசிகர் “கார்கி திரைப்படம் பெற்றோர்கள் குழந்தைகளுடன் காண வேண்டிய திரைப்படம்” என கூறியுள்ளார்.
சினிமா விமர்சகர் ராஜசேகர் “கார்கி திரைப்படம் நிச்சயமாக வணிகத்தில் பெரிய அளவில் வெற்றிபெறும்” என பாராட்டி உள்ளார்.