Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

கல்யாண வீட்டில் குத்தாட்டம் போட்ட சாய் பல்லவி.. வைரல் வீடியோ

CINEMA

கல்யாண வீட்டில் குத்தாட்டம் போட்ட சாய் பல்லவி.. வைரல் வீடியோ

சாய் பல்லவி தன்னுடைய உறவினர் ஒருவர் வீட்டில் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக வந்து நம் உள்ளங்களை கொள்ளை கொண்டவர் சாய் பல்லவி. இவர் மலையாளம், தெலுங்கு, தமிழ் என பல மொழி திரைப்படங்களில் பிசியாக வலம் வருகிறார்.

சாய் பல்லவி அசுரத்தனமாக நடனமாடுபவர். பிரேமம் திரைப்படத்தில் யாரும் எதிர்பார்க்காத விதமாக அவர் ஆடிய நடனத்தை நாம் மறக்கமுடியாது. மேலும் “ரவுடி பேபி” பாடலில் அவர் ஆடிய நடனம் சூறாவளி போல் இருந்தது.

அவர் நடிப்பில் உருவாகி வரும் “கார்கி” திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது. இத்திரைப்படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். “96”திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து சாய் பல்லவியின் பிறந்த நாளான கடந்த 9 ஆம் தேதி ராணா நடிப்பில் உருவான “விராட பருவம்” திரைப்படத்தின் “சோல் ஆஃப் வெண்ணிலா” என்ற பாடலும் வெளியாகியுள்ளது.

மேலும் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாக இருக்கும் “SK21” திரைப்படத்திலும் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் தன்னுடைய உறவினர் ஒருவரின் திருமண விழாவில் சாய் பல்லவி குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தன்னுடைய நண்பர்களுடன் அதிரிபுதிரியாக நடனம் ஆடுகிறார். இந்த வீடியோ அவரது பிறந்த நாளில் அவரது ரசிகர்களால் வைரலாக பரப்பப்பட்டது.

எனினும் இந்த வீடியோ தற்போதும் வைரலாகி வருகிறது. சாய் பல்லவியின் நடனத்தை பற்றி நாம் அறிந்திடாதது ஒன்றும் இல்லை. புயல் போல் நடனம் ஆடுபவர் அவர். அவர் நடித்த திரைப்படங்கள் பலவற்றில் அவர் நடனத்திற்கென்றே பிரத்யேகமாக பாடல்களை உருவாக்குவார்கள் என்று கூறினால் கூட அது மிகையாகாது.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in CINEMA

To Top