CINEMA
சச்சின் பகிர்ந்த அரிய புகைப்படம்.. அவர் கூட யார் இருக்கா ன்னு பாருங்க..
சச்சின் டெண்டுல்கர் பிரபல நடிகர் ஒருவருடன் தான் எடுத்த அரிய புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கிரிக்கெட்டில் உலக நாயகனாக வலம் வந்த சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முதன் முதலாக 200 ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். அதே போல் சர்வதேச போட்டிகளில் நூறு முறை சதம் அடித்த பெருமையும் இவரையே சேரும்.
சச்சின் டெண்டுல்கருக்கு 2013 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இதன் மூலம் விளையாட்டு வீரர்களில் முதன் முதலாக பாரத ரத்னா விருது வாங்கியவர் என்ற பெருமையையும் சேர்த்துக் கொண்டார்.
மேலும் இவரது சாதனைகளை பாராட்டி 1994 ஆம் ஆண்டு அர்ஜூனா விருதும், 1997 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும் வழங்கப்பட்டது. அதே போல் 1999 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2008 ஆம் ஆண்டு பத்ம பூசன் விருதும் வழங்கப்பட்டது. இவ்வாறு பல சாதனைகளை படைத்த சச்சின் டெண்டுல்கர் கடந்த 2013 ஆம் ஆண்டு சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் ஒரு முன்னணி பாலிவுட் நடிகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். அதில் அந்த பாலிவுட் நடிகருடன் தான் எடுத்த அரிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த நடிகர் வேறு யாரும் இல்லை.
பிரபல நடிகை தீபிகா படுகோனின் கணவரும் பாலிவுட்டின் முன்னணி நடிகருமான ரன்வீர் சிங் தான். இப்புகைப்படம் பல காலத்திற்கு முன்பு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. தற்போது இப்புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Happy Birthday, Ranveer! Have a great year ahead.
Found this picture of ours… Any guesses when this was clicked? pic.twitter.com/1js6lUk0N3— Sachin Tendulkar (@sachin_rt) July 6, 2022