CINEMA
மாநாடு படத்தின் வெற்றி… சிம்புவை விட எஸ் ஜே சூர்யாவுக்கு டிமாண்ட் – ஷங்கர் படத்தில் ஒப்பந்தம்!
இயக்குனரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா சமீபத்தில் வில்லனாக நடித்த மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

s j suryah
நடிகனாக வேண்டும் என்ற ஆசையோடு சினிமாவுக்கு வந்த எஸ் ஜே சூர்யா முதலில் இயக்குனர் ஆகி வாலி மற்றும் குஷி ஆகிய வெற்றி படங்களைக் கொடுத்தார். பின்னர் நியூ படம் மூலமாக நடிகராக அறிமுகமான அவர் அதன் பின்னர் நடிப்பில் அதிகமாக ஆர்வம் காட்டினார்.
அப்படி அன்பே ஆருயிரே, வியாபாரி, திருமகன் மற்றும் நியூட்டனின் மூன்றாம் விதி ஆகிய படங்களில் வரிசையாக நடித்தார். ஆனால் ஒரு சில படங்களை தவிர மற்ற படங்கள் எல்லாம் தோல்வியை சந்தித்தன. இதையடுத்து அவர் சில ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் நடித்த இறைவி திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.
அதைப் பயன்படுத்திக் கொண்டு வில்லன ஹீரோ எனக் கலந்துகட்டி கலக்கி வருகிறார். சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்புவோடு அவர் நடித்த மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. படத்தில் எஸ் ஜே சூர்யாவின் தனுஷ் கோடி கதாபாத்திரம் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது. சிம்புவுக்கு இணையாக படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணியாக இருந்தார்.

RC15
இதையடுத்து இப்போது எஸ் ஜே சூர்யாவுக்கு அடுத்தடுத்து வில்லனாக நடிக்க வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. சிவகார்த்திகேயனின் டான் படத்தில் வில்லனாக நடித்து வரும் அவர் பொம்மை, இரவான் ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் நடித்துவருகிறார்.
இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் ராம்சரண் தேஜாவை வைத்து இயக்கும் படத்தில் இப்போது வில்லனாக நடிக்க எஸ் ஜே சூர்யா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக அவருக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
