CINEMA
“RRR ஒரு Gay படம்”.. சர்ச்சையை கிளப்பிய சவுண்ட் டிசைனர்.. வெளுக்கும் நெட்டிசன்கள்
ஆர் ஆர் ஆர் திரைப்படத்தை குறித்து பிரபல சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி கூறிய கருத்து சர்ச்சையாகி உள்ளது.
பாகுபலி இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான திரைப்படம் “ஆர் ஆர் ஆர்”. இத்திரைப்படத்தில் ஜூனியர் என் டி ஆர், ராம் சரண், ஆலியா பட் ஆகியோர் நடித்திருந்தனர்.
“ஆர் ஆர் ஆர்” திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதிலும் வெறித்தனமான வெற்றியை பெற்றது. ரூ. 550 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் ரூ. 1200 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்நிலையில் ஆர் ஆர் ஆர் திரைப்படம் குறித்து ஆஸ்கர் விருது வாங்கிய பிரபல சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி தெரிவித்துள்ள கருத்து தற்போது சர்ச்சையாகி வருகிறது.
அதாவது டிவிட்டரில் முனிஷ் பரத்வாஜ் என்றொருவர் “ஆர் ஆர் ஆர் என்னும் குப்பை படத்தை 30 நிமிடங்கள் பார்த்தேன்” என பகிர்ந்திருந்தார். அதற்கு கமெண்ட் அடித்த ரசூல் பூக்குட்டி “Gay படம்” என கூறினார்.
இதனை தொடர்ந்து இந்த கருத்து சர்ச்சையான நிலையில் ரசிகர்கள் பலரும் ரசூல் பூக்குட்டியை திட்டி வந்தனர். அதனை தொடர்ந்து ரசூல் பூக்குட்டி “மேலை நாடுகளில் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தை குறித்து அவ்வாறு தான் கூறுகிறார்கள். அதனை நான் மேற்கோள் தான் காட்டினேன்” என தெளிவு படுத்தி உள்ளார்.
எனினும் ரசூல் பூக்குட்டியின் கருத்து சர்ச்சையாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் அவர் மீது பெரும் கோபத்தில் உள்ளனர்.
