CINEMA
RRR நடிகையின் வயிற்றில் குழந்தை… வைரல் புகைப்படம்
ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் கதாநாயகிக்கு குழந்தை பிறக்க உள்ளதாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகை ஆலியா பட், ஹிந்தி திரை உலகின் முன்னணி நடிகை ஆவார். இவர் “ஸ்டுடண் ஆஃப் தி இயர்” என்ற திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின் “ஹை வே”, “2 ஸ்டேட்ஸ்”, “அக்லி”, “கபூர் அண்ட் சன்ஸ்”, “உடுத்தா பஞ்சாப்”, “ஏ தில் ஹை முஷ்கில்”, “டியர் சிந்தகி”, “ராஸி”, “கல்லி பாய்” கலங்க்” என பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஆரம்ப கட்டத்தில் க்யூட் கதாநாயகியாக திகழ்ந்து வந்த ஆலியா பட்டை பலரும் “இவர் ஒரு திரைப்படத்தை தாங்கக்கூடிய அளவுக்கெல்லாம் வளர மாட்டார்” என விமர்சனங்களை அள்ளித் தெளித்தனர். ஆனால் அதை எல்லாம் நொருக்கும் விதமாக “உடுத்தா பஞ்சாப்” திரைப்படத்தில் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தினார்.
அதனை தொடர்ந்து முழு திரைப்படத்தையும் தாங்க கூடிய அளவிற்கு திறமையான நடிகை தான் என ஒரு திரைப்படத்தில் நிரூபித்தார். அத்திரைப்படத்தின் பெயர் “ராஸி”. இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு உளவு பார்க்கும் உளவாளியாக சிறப்பாக நடித்திருப்பார்.
அதனை தொடர்ந்து “கங்குபாய் கத்தியவாடி” திரைப்படத்தில் கங்குபாய் கதாப்பாத்திரத்தில் கலக்கி எடுத்திருப்பார். பாகுபலி இயக்குனர் ராஜமௌலி இயக்கிய “ஆர் ஆர் ஆர்” திரைப்படத்திலும் நடித்திருப்பார்.
இதனிடையே பாலிவுட்டின் முன்னணி நடிகரான ரன்பீர் கபூரை கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் மருத்துவமனையில் பரிசோதனை செய்யும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அப்புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. நடிகர்கள் பலரும் ஆலியா பட்டிற்கும் ரன்பீர் கபூருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
