Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“KGF திரைப்படத்தால் காணாமல் போன ராஷ்மிகா?”… அந்தோ பரிதாபம்!

CINEMA

“KGF திரைப்படத்தால் காணாமல் போன ராஷ்மிகா?”… அந்தோ பரிதாபம்!

கே ஜி எஃப் திரைப்படத்தின் வெற்றியால் புஷ்பா 2 திரைப்படத்தில் ராஷ்மிகா கதாப்பத்திரத்திற்கு நேர்ந்த ஒரு பரிதாப செய்தி வெளிவந்துள்ளது.

அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்த திரைப்படம் “புஷ்பா”. இத்திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக வெளிவந்தது.

“புஷ்பா” திரைப்படம் வெளியான எல்லா மொழிகளிலும் மாஸ் ஹிட் ஆனது. பாடல்கள் எல்லாம் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. குறிப்பாக “ஓ சொல்றியா” “சாமி” ஆகிய பாடல்கள் எப்போதும் டாப் லெவல் டிரெண்டிங்கில் இருக்கிறது.

“ஓ சொல்றியா” பாடலில் சமந்தா ஆடிய ஐட்டம் டேன்ஸ் பார்வையாளர்களின் தூக்கத்தை கெடுத்தது. அதே போல் ராஷ்மிகா மந்தனா தனது பொன்னிற மேனியால் கவர்ச்சியில் மூழ்கி முத்து எடுத்த “சாமி” பாடலில் அவர் ஆடிய நடனம் வேற லெவல் ரீச் ஆனது.

இந்நிலையில் “புஷ்பா” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது “புஷ்பா” முதல் பாகத்தில் ஃபகத் ஃபாசிலுக்கும் அல்லு அர்ஜூனுக்குமான பகை தொடங்கும் போது கிளைமேக்ஸை வைத்திருப்பார்கள்.

இதனை தொடர்ந்து “புஷ்பா 2” திரைப்படத்தில் ஃபகத் ஃபாசில், அல்லு அர்ஜூன் ஆகிய இருவரை சுற்றியே திரைக்கதை அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் கே ஜி எஃப் திரைப்படத்தின் அபார வெற்றிக்கு பிறகு “புஷ்பா 2” திரைப்படத்தின் திரைக்கதையை சற்று பலப்படுத்தி வருவதாக செய்திகள் வந்தன.

இதனால் ராஷ்மிகா மந்தனாவின் ஸ்ரீவல்லி கதாப்பாத்திரத்தின் பங்களிப்பை திரைக்கதையில் குறைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. “புஷ்பா” முதல் பாகத்தில் ராஷ்மிகா கதாப்பாத்திரத்திற்கு ஓரளவு பங்களிப்பு இருந்தது. ஆனால் “புஷ்பா 2” திரைப்படத்தில் அந்த பங்களிப்பும் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது ராஷ்மிகா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top