CINEMA
சீயான் விக்ரமுடன் இணையும் ராஷ்மிகா மந்தனா.. சூடான தகவல்
சீயான் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீயான் விக்ரமின் 61 ஆவது திரைப்படத்தை பா ரஞ்சித் இயக்குகிறார். இத்திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இத்திரைப்படம் 19 ஆம் நூற்றாண்டின் பின்னணியில் கோலார் தங்க வயலில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இத்திரைப்படம் 3D தொழில்நுட்பத்தில் எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் கதாநாயகி குறித்த சுவாரசியமான தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பா ரஞ்சித் தற்போது “நட்சத்திரம் நகர்கிறது” என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். அதனை தொடர்ந்து விக்ரமின் 61 ஆவது திரைப்படத்தை இயக்க உள்ளார்.
ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து அவர் நடிப்பில் “சீதா ராமம்” என்ற திரைப்படம் வெளிவர தயாராக உள்ளது.
சீயான் விக்ரம் நடித்த “கோப்ரா” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 11 ஆம் தேதி வெளியாகிறது. அதனை தொடர்ந்து மணி ரத்னம் இயக்கத்தில் விக்ரம் ஆதித்ய கரிகாலனாக நடித்த “பொன்னியின் செல்வன்” முதல் பாகமும் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகிறது. இந்த இரு திரைப்படங்களுக்கும் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பா ரஞ்சித் எப்போதும் தனது அரசியலை முன் நிறுத்தியே தனது படங்களை உருவாக்கி வருகிறார். அதே போலவே சீயான் விக்ரமின் 61 ஆவது திரைப்படமும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
