Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“தனிமையே என்றும் இனிமை”; ராஷ்மிகாவின் முன்னாள் காதலர் பளீச் பேட்டி

CINEMA

“தனிமையே என்றும் இனிமை”; ராஷ்மிகாவின் முன்னாள் காதலர் பளீச் பேட்டி

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முன்னாள் காதலர் ரக்சித் ஷெட்டி சமீபத்திய பேட்டி ஒன்றில் ராஷ்மிகாவின் பிரிவுக்கு பின்னான மனநிலை குறித்து பதில் அளித்துள்ளார்.

ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் வெளிவந்த “கீதா கோவிந்தம்” திரைப்படத்தின் மூலம் பரவலாக அறியபட்டார். தமிழ் திரை உலகில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த “சுல்தான்” திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனார். அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளிவந்த “புஷ்பா” திரைப்படத்தில் “சாமி” பாடலுக்கு அவர் ஆடிய கவர்ச்சி நடனம் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது.

இதனை தொடர்ந்து தற்போது விஜய் நடித்து வரும் “தளபதி 66” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளிவந்த “கிர்க் பார்ட்டி” என்ற திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகிற்கே அறிமுகம் ஆனார். அத்திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் ரக்சித் ஷெட்டிக்கும் ராஷ்மிகாவுக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டு அதன் பின் காதலாக மாறியது.  இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு நிச்சயம் செய்து கொண்டனர். ஆனாலும் சில மாதங்களிலேயே இருவரும் பிரிந்தனர்.

ரக்சித் ஷெட்டி நடித்த “சார்லி 777” திரைப்படம் தமிழிலும் வெளிவந்து பரவலான வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படம் ஒரு நாய்க்கும் கதாநாயகனுக்குமான பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாகும். இந்நிலையில் இத்திரைப்படத்தை குறித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் நிருபர் “அனைவரும் உங்களுக்கு எப்போது திருமணம் என கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஏன் தனிமையிலேயே இருக்கிறீர்கள்?” என கேட்டார்.

அதற்கு பதில் கூறிய ரக்சித் ஷெட்டி, “தனிமையில் இருப்பது சிறப்பானதாக இருக்கிறது. ஆனால் திருமணம் என்று வரும்போது, அதற்கான சரியான காலமும் நேரமும் அமைய வேண்டும்” என கூறினார்.

ராஷ்மிகா மந்தனாவை பிரிந்த பின் ரக்சித் ஷெட்டி பெரும் துயரத்திற்கு பின் அதில் இருந்து மீண்டு வந்தார் என கூறப்படுகிறது. பலரும் அடுத்து எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறீர்கள் என ரசிகர்கள் பலரும் கேட்ட வண்ணம் இருந்தனர். அக்கேள்வியை நிருபர் பிரதிபலித்ததற்கு தான் ரக்சித் ஷெட்டி அவ்வாறு பதில் கூறியுள்ளார்.

Continue Reading

More in CINEMA

To Top